யுபிஎஸ்சி சிடிஎஸ்-II தேர்வு முடிவு வெளியீடு.. தகுதி பட்டியல் அறிவிப்பு.. தெரிந்துக் கொள்ளுவது எப்படி..?
மத்திய பணியாளர் தேர்வாணையமானது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி நேர்காணலுக்கு தேர்ச்சி பெற்ற 6,658 விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையமானது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி நேர்காணலுக்கு தேர்ச்சி பெற்ற 6,658 விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
யுபுஎஸ்சி கடந்த மாதம் 18 ஆம் தேதி இந்திய ராணுவ பயிற்சி மையம் , இந்திய கடற்படைப் பயிற்சி மையம், விமானப்படை பயிற்சி மையம் , ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் , பெண்களுக்கான தொழில்நுட்பம் சாராத பயிற்சிகளில் சேர்வதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.
மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட் !! டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது..? வெளியான அறிவிப்பு..
இதற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெற்றது. தற்போது தேர்வின் முடிவின் அடிப்படையில், நேர்காணலுக்கு தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 6,658 விண்ணப்பதாரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைத் தேர்வு வாரியத்தால் நேர்காணல் தேர்வு நடத்தப்படும். தேர்வர்கள் தங்களது முடிவுகளை upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
மேலும் தேர்வர்கள் நேர்காணலின் போது வயது (பிறந்த தேதி), கல்வித் தகுதிகள், என்சிசி (சி) (இராணுவப் பிரிவு/சீனியர் டிவிஷன் ஏர் விங்/நேவல் விங்) போன்றவற்றிற்கான அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.