MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Job Vacancy: இன்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! ரூ. 1 லட்சம் சம்பளத்தில் வேலை! தேர்வின்றி வங்கி மேனேஜர் ஆகலாம்!

Job Vacancy: இன்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! ரூ. 1 லட்சம் சம்பளத்தில் வேலை! தேர்வின்றி வங்கி மேனேஜர் ஆகலாம்!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) பொறியியல் பட்டதாரிகளுக்காக பணியிடங்களை அறிவித்துள்ளது. ஐடி மற்றும் சைபர் செக்யூரிட்டி துறைகளில் உள்ள இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 09 2026, 07:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நீங்கள் வங்கி அதிகாரியாக வாய்ப்பு
Image Credit : Asianet News

நீங்கள் வங்கி அதிகாரியாக வாய்ப்பு

பொறியியல் பட்டதாரியா நீங்கள்? ஐடி (IT) மற்றும் சைபர் செக்யூரிட்டி துறையில் சாதிக்கத் துடிப்பவரா? உங்களுக்கு ஒரு மெகா ஜாக்பாட் காத்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), டெபுட்டி மேனேஜர் பணியிடங்களுக்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதற்கெனத் தனியாகக் கடினமான எழுத்துத் தேர்வுகள் ஏதுமில்லை! நேரடியாக நேர்காணல் மூலம் நீங்கள் வங்கி அதிகாரியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

25
என்னென்ன பணிகள்?
Image Credit : Getty

என்னென்ன பணிகள்?

தற்போது தொழில்நுட்பம் சார்ந்த 12 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • ஐ.டி பாதுகாப்பு நிபுணர் (IT Security Specialist)
  • எமர்ஜிங் டெக்னாலஜி (Emerging Technology)
  • சைபர் செக்யூரிட்டி அனலிஸ்ட் (Cyber Security Analyst)
  • இன்சிடென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் போரன்சிக்ஸ் (Incident Management and Forensics)
  • டெஸ்ட் இன்ஜினீயர்ஸ் (Test Engineers)

Related Articles

Related image1
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Related image2
Business: ரூ.10 ஆயிரம் முதலீட்டில் மாதம் 30 ஆயிரம் வருமானமா?! லாபத்தை அள்ளித்தரும் யாருக்கும் தெரியாத ரகசிய தொழில்.! உங்களுக்கு தெரியுமா?!
35
சம்பளம் மற்றும் தகுதிகள்
Image Credit : social media

சம்பளம் மற்றும் தகுதிகள்

இந்த அதிகாரப்பூர்வ பணிகளுக்கு ஆரம்பத்திலேயே மிகச்சிறந்த ஊதியம் வழங்கப்படுகிறது.

சம்பளம் 

ரூ. 64,820 முதல் ரூ. 93,960 வரை (இதர சலுகைகளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் வரை கைநிறையச் சம்பளம் பெறலாம்).

கல்வித்தகுதி

B.E அல்லது B.Tech (பணிக்கு ஏற்ற பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்).

வயது வரம்பு

25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு).

45
தேர்வு செய்யப்படும் முறை
Image Credit : Google

தேர்வு செய்யப்படும் முறை

பொதுவாக வங்கி வேலை என்றாலே பிரிலிம்ஸ், மெயின்ஸ் எனத் தேர்வுகள் இருக்கும். ஆனால், இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் கல்வி மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு ஷார்ட்லிஸ்ட் (Shortlisting) செய்யப்பட்டு, நேரடியாக நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்.

55
விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : Getty

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் recruitment.sbi.bank.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: ஏற்கனவே தொடங்கிவிட்டது.
  • கடைசி தேதி: மார்ச் 16, 2026.

இந்தப் பணிகளுக்குக் குறிப்பிட்ட கால அளவு வேலை அனுபவம் அல்லது கூடுதல் சான்றிதழ்கள் அவசியமாகிறது. முழு விவரங்களையும் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பிடிஎப் (PDF) கோப்பைப் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
படித்தவர்கள், அதிக சம்பளம் பெறுபவர்களா நீங்கள்? உங்கள் வேலைக்கு AI வைக்கும் குறி - புதிய ரிப்போர்ட்!
Recommended image2
மீண்டும் வசந்த காலம்! முடங்கி கிடந்த ஐடி துறையில் திடீர் பல்டி! 2026 பிப்ரவரியில் இந்திய வேலைவாய்ப்பு சந்தை படைத்த புதிய சாதனை!
Recommended image3
ஐஐடி (IIT) அளவுக்கு கெத்தான படிப்பு! அறிவியலில் மிரட்டலான எதிர்காலம்! ஐஐஎஸ்இஆர்-ல் சேர நீங்க தயாரா?
Related Stories
Recommended image1
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Recommended image2
Business: ரூ.10 ஆயிரம் முதலீட்டில் மாதம் 30 ஆயிரம் வருமானமா?! லாபத்தை அள்ளித்தரும் யாருக்கும் தெரியாத ரகசிய தொழில்.! உங்களுக்கு தெரியுமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved