தமிழகத்தில் மொழிப்பெயர்ப்பாளர் பணிகளுக்கு எஸ்எஸ்சி தேர்வு.. எப்போது..? எங்கு..? விவரம் உள்ளே
தென் மண்டலத்தில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு தேதியை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர், ஜூனியர் மொழிப்பெயர்ப்பாளர், சீனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
இந்த பணியிடங்களுக்கான தாள்-1 தேர்வு தென் மண்டலத்தில் அக்டோபர் 1 அன்று நடைபெறுகிறது. மொத்தமாக 351 பேர் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.தமிழகத்தை பொருத்தவரை சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. அதே போல் ஆந்திரத்தில் கர்னூல், விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் தெலுங்கானாவில் ஹைதராபாதிலும் தேர்வு நடைபெறுகிறது.
மேலும் படிக்க:TNTET 2022: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி வெளியானது.. தேர்வு குறித்த முழு விபரம் உள்ளே.!!
வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தென்மண்டலத்தில் தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் தேர்வானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை 2 மணி நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அனுமதி சீட்டை தேர்வு நடைபெறும் தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக தேர்வாணைய வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுக்குறித்து விண்ணப்பதாரர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மற்றும் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சலுக்கும் அனுப்படும். விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டு மற்றும் அசல் அடையாள சான்றிதழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட் !! டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது..? வெளியான அறிவிப்பு..