MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கைகொடுத்த ராமராஜன்...என்ன செய்தார் தெரியும்?

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கைகொடுத்த ராமராஜன்...என்ன செய்தார் தெரியும்?

"தங்கமான ராசா"  படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அவர் வாங்கின 10 லட்சம் கடனும் அடைந்தது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Sep 24 2022, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ramarajan

ramarajan

கிராமத்து நாயகனாய் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்த ராமராஜன் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்தது.

கங்கை அமரன்இயக்கிய கரகாட்டக்காரன் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாய் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. சில திரை அரங்குகளில் ஒரு வருடம் கூட இந்த படம் ஒட்டப்பட்டு 400 நாட்கள் ஓடியதற்கான சாதனையையும் பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ramarajan

ramarajan

 பின்னர் எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, ஊர்காவல்காரன், பாட்டுக்கு நான் அடிமை என அப்போதைய உச்ச நட்சத்திரங்களாக இருந்த ரஜினிகாந்த் கமலஹாசனை காட்டிலும் மிகப்பெரிய பேரையும் புகழையும் பெற்றிருந்தவர் ராமராஜன். 


மேலும் செய்திகளுக்கு...ஓடிடி-க்கு வரும் விக்ரமின் கோப்ரா எப்ப ரிலீஸ் தெரியுமா?

44 படங்களில் தொடர்ந்து தனி ஹீரோவாக நடித்துள்ள ராமராஜன் தற்பொழுது 10 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ. என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி தற்போது சாமானியன் என்னும் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது 50 படங்கள் வரை நாயகனாக நடிக்கும் ஒரே நடிகன் நானாகத்தான் இருப்பேன். இதுவரை யாரும் இதுபோன்ற புகழைப் பெறவில்லை. நூறு கோடி ரூபாய் கொடுத்தாலும் தரங்கெட்ட கதைகள் நடிக்க மாட்டேன் என வீரியமாக பேசியிருந்தார் ராமராஜன்.

34
ramarajan

ramarajan

இந்நிலையில் ராமராஜன் குறித்த தகவலை  எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருமான சூறா தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதாவது ராமராஜனின் முதல் படமான நம்ம ஊரு நல்ல ஊரு என்கிற படத்தை இயக்கிய அழகப்பன் 'என் வழி தனி வழி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் அந்த படம் தோல்வியை சந்தித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...நகுல் என்னிடம் பேசாததற்கு ரஜினி மகள்களும் ஒரு காரணம்... புது குண்டை தூக்கிபோட்ட தேவயானியின் கணவர் ராஜகுமாரன்

அந்த படத்தின் தயாரிப்பாளருமான அழகப்பனுக்கு 10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அந்த பணம் மிகப்பெரிய தொகையாகும் அதை அடுத்தது சேலம் விநியோகஸ்தராக இருந்த எம் எஸ் பிலிம்ஸ் பரமசிவம் அவர்கள் ராமராஜனிடம் இதைக் கூறி கால்ஷீட் கேட்க கூறியுள்ளார். இதையடுத்து ராமராஜனை  சந்தித்த அழகப்பன் தன்னுடைய சூழ்நிலையை எடுத்துக் கூற உடனடியாக கால் ஷீட் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் ராமராஜன்.

44

அதன்படி தான் உருவாகியுள்ளது "தங்கமான ராசா"  இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அவர் வாங்கின 10 லட்சம் கடனும் அடைந்தது. அதோட இந்த படத்தை தயாரிப்பதற்காக தயாரிப்பாளர்களிடம் பெற்றிருந்த கடனையும் அடைந்துள்ளார் அழகப்பன்.

இதையும் படியுங்கள்... ‘வெந்து தணிந்தது காடு... கூல் சுரேஷ ஹீரோவா போடு’னு சொல்லும் அளவுக்கு.. ஆளே டோட்டலா மாறிய கூல் சுரேஷ்

ராமராஜன் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகமும் பணியாற்றியுள்ளார். அதன்படி இவர் மண்ணுக்கேத்த பொண்ணு, மருதாணி, வணக்கம் யார் பேசுறது, மறக்க மாட்டேன், அம்மன் கோவில் வாசலிலே, நம்ம ஊரு ராசா, கோபுர தீபம் விவசாயி மகன், சீறிவரும் காளை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது ராமராஜனின் ரீ என்ட்ரியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ராமராஜன் (நடிகர்)
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved