பைக் வேகத்தால் இளைஞர்களை கவர்ந்த டிடிஎஃப் வாசன்.. 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்
கோயம்புத்தூர் போலீசார் டிடிஎஃப் வாசன் மீது 3 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்தனர்.
கோவையை சேர்ந்த டி.டி.எப் வாசன் என்ற இளைஞர் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சேனலில் தொடர்ந்து தனது விலையுயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அது தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் 2 கே கிட்ஸ் மத்தியில் பிரபலமானவை. இவருக்கு சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதிகள் தனது ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்தார் டி டி எப் வாசன்.
இவரால் அங்கு பெரும் திரளான கூட்டம் கூடியதால் பலத்த சர்ச்சை கிளம்பியது. பலமான விமர்சனங்களும் எழுந்தது. நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது இளைஞர்களுக்கு தவறான முன்னோர்கள் இருப்பதாக சென்னை காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது . பின்னர் தான் பயிற்சி எடுத்துக் கொண்டு இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்பட்ட வீடியோ ஜமுனா ஹைவேஸ் சாலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அந்த பிரச்சனை சிறிது ஓய்ந்திருந்தது.
மாஸாக என்ட்ரி கொடுத்த பொன்னியின் செல்வன் டீம்.. வைரல் போட்டோஸ் இதோ!
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சேர்ந்த மரகடை அதிபரும் பிரபல சமூக ஊடக பிரபலமுமான ஜிபி முத்துவை சந்தித்த வாசன். அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற வீடியோவும் வைரலானது. அந்த ரைட் தொடர்பான வீடியோக்களை பார்த்த கோவை சூலூர் போலீஸ்சார். ஜி பி முத்துவை வைத்து வேகமாக பைக் ஓட்டியது தொடர்பாக டிடிஎஃப் வாசன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கைகொடுத்த ராமராஜன்...என்ன செய்தார் தெரியும்?
இந்த வழக்கு தொடர்பாக பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ள காவல் துறையினர், டிடிஎஃப் வாசல் என்ற நபர் அவரது இரு சக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி பி முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம் டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு என்டிஎஸ் பேக்கரி அருகே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து அவரது youtube சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பந்தமாக போத்தனூர் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டது.