Asianet News TamilAsianet News Tamil

அன்று பாமக முறியடித்தது, இன்றும் கூட நிற்கிறது.. தமிழக அரசு இதை செய்தே ஆகணும் - கட்டளை போட்ட ராமதாஸ் !

பா.ம.க. மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாகத் தான் புல்லூர் தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ள ஆந்திர அரசு முயல்கிறது.

Pmk ramadoss urges tn govt to immediately stop the project to increase the capacity of Palaru barrage
Author
First Published Sep 24, 2022, 7:00 PM IST

இதுகுறித்து  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆந்திர மாநிலம், குப்பம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட புல்லூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கொள்ளளவை அதிகரிக்க ரூ. 120 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறார். 

இரு மாநில நல்லுறவை சிதைக்கும் வகையிலான ஆந்திர முதல்வரின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள தமிழக எல்லை கிராமமான புல்லூரில் கனக நாச்சியம்மன் கோவிலுக்கு அருகில் பாலாற்றின் குறுக்கே 12 அடி உயரத்திற்கு ஆந்திர அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இதன் கொள்ளளவை 2 டி.எம்.சி அதிகரிக்கும் திட்டத்தை தான் ஆந்திர முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

Pmk ramadoss urges tn govt to immediately stop the project to increase the capacity of Palaru barrage

மேலும் செய்திகளுக்கு..ஒரு நாளுக்கு 102 கோடி.! அதானி அண்ணண் சொத்து மதிப்பு இவ்வளவா? அடேங்கப்பா..! வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள் !

உண்மையில் ஆந்திர அரசின் நோக்கம் புல்லூர் தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பது மட்டுமல்ல. அணையின் உயரத்தை அதிகரிப்பதால் கிடைக்கும் கூடுதல் நீரை சேமிக்கும் வகையில் அங்குள்ள ஏரி, குளங்களை தூர் வாருவதும், புதிய ஏரி, குளங்களை அமைப்பதும் தான் ஆந்திர அரசின் திட்டம் ஆகும். இதன்மூலம் 2 டி.எம்.சி நீரை கூடுதலாக சேமித்து வைக்க முடியும். குப்பம் தொகுதிக்குட்பட்ட கணேசபுரத்தில் பல டி.எம்.சி. கொள்ளளவுள்ள அணையை கட்ட சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார். 

பா.ம.க. மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாகத் தான் புல்லூர் தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ள ஆந்திர அரசு முயல்கிறது. புல்லூர் தடுப்பணைப் பணிகளை ஆந்திர அரசு நிறைவு செய்துவிட்டாலும் கூட, அதற்கு எதிராக 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்ததால், அடுத்தகட்டமாக ஏரி மற்றும் குளங்களை தூர்வாரும் பணிகளையும், புதிய நீர்நிலைகளை கட்டும் பணியையும் ஆந்திர அரசு அப்போது நிறுத்தி வைத்திருந்தது. 

மேலும் செய்திகளுக்கு..கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. அதுக்குன்னு இப்படியா பண்றது ? அதிர்ச்சி சம்பவம்

Pmk ramadoss urges tn govt to immediately stop the project to increase the capacity of Palaru barrage

அந்த பணிகளைத்தான் இப்போது மீண்டும் தொடங்கப் போவதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். புல்லூர் தடுப்பணை தான் பாலாற்றின் குறுக்கே ஆந்திர எல்லையில் கட்டப்பட்ட கடைசி தடுப்பணை ஆகும். அந்த அணையின் உயரம் 12 அடியாக உயர்த்தப்பட்ட பிறகு தமிழகத்திற்கு தண்ணீர் வருவது குறைந்துவிட்டது. கட்டுப்படுத்த முடியாத வெள்ளம் பெருக்கெடுத்த காலங்களில் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் வந்தது.

புல்லூர் தடுப்பணையின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டால், வெள்ளம் ஏற்பட்டாலும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் வராது. அதனால் பாலாற்று பாசனப் பகுதிகள் பாலைவனமாகி விடக்கூடும். ஆந்திராவின் வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 அணைகளை கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ள ஆந்திர அரசு, இப்போது பாலாற்று நீரையும் தடுக்க முயல்வது நியாயமல்ல. புல்லூர் தடுப்பணைக்கு எதிரான ஆந்திர அரசின் நடவடிக்கைகளை தமிழக அரசு அரசியல்ரீதியாக எதிர்க்காமல் விட்டது தான், இதற்கு காரணம். 

ஆந்திர அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு கொண்டு வரச் செய்து, ஆந்திர அரசின் திட்டத்திற்கு தடை பெற  வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ?? பாஜகவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !

Follow Us:
Download App:
  • android
  • ios