ஒரு நாளுக்கு 102 கோடி.! அதானி அண்ணண் சொத்து மதிப்பு இவ்வளவா? அடேங்கப்பா..! வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள் !
ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் அதானி.
கடந்த 5 வருடத்தில் அதானி குழுமத்தின் அடுத்தடுத்து வர்த்தகக் கைப்பற்றல், வர்த்தக விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 1440 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி.
60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவருடன் மற்றொரு இந்தியரான முகேஷ் அம்பானியும் இந்தப் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருக்கிறார். அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..“காந்தி ஜெயந்தி அப்போ RSS பேரணியா? தமிழக மண்ணில் பேராபத்து?” கொந்தளிக்கும் சீமான்!
அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி பசுமை எனர்ஜி, அதானி துறைமுகங்கள், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் என 4.97 முதல் 3.45 சதவீதம் வரை அவரது நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.40,000 கோடி உயர்ந்துள்ளது.
அதனால் அவர் ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். அதானி உலக அளவில் இரண்டாவது பணக்காரர் என்றால், அவரது சகோதரர் எவ்வளவு சொத்து மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் தலையே சுத்துகிறது. அதானியின் மூத்த சகோதரர் வினோத் சாந்திலால் தான் அவர். துபாயில் குடியிருந்து வரும் வினோத் அதானி, சிங்கப்பூர், ஜகர்த்தா, துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வர்த்தகம் செய்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு..எடப்பாடி, வேலுமணியை உருவாக்கியவர்..கொங்கு மண்டலத்தின் பவர் சென்டர் மறைவு - யார் இந்த ராவணன்!
கடந்த ஓராண்டில் இவரது சொத்து மதிப்பு 28 சதவீதம் அதிகரித்து ரூ.37,400 கோடியை எட்டியுள்ளது என ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா கோடீஸ்வரர் பட்டியல் 2022-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நாளொன்றுக்கு ரூ.102 கோடி வருவாயை ஈட்டி வருகிறார். சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்ததையடுத்து இந்தியாவில் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் வினோத் அதானி இரண்டு இடங்கள் முன்னேற்றம் கண்டு ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஐஐஎஃப்எல் கோடீஸ்வரர் பட்டியலில் 94 வெளிநாடுவாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அதானி தினசரி ரூ.102 கோடி வருவாயை ஈட்டி முதலிடத்தை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் 24 மணி நேரமும் மது,கஞ்சா கிடைக்கும்.. ஸ்டாலின் பிளான் இதுதான் - திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி