கனமழை காரணமாக ஈரோடு அந்தியூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்தியூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்தியூரில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் அந்தியூரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

10:57 PM (IST) Oct 16
காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (அக்டோபர் 17ஆம் தேதி) காலை தொடங்குகிறது.
10:05 PM (IST) Oct 16
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
09:30 PM (IST) Oct 16
பள்ளி பேருந்தில் பெரிய மலை பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
08:25 PM (IST) Oct 16
சத்யா கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளனர் சிபிசிஐடி.
07:20 PM (IST) Oct 16
பாராளுமன்றக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து மாண்புமிகு அமைச்சர் அமித் ஷா விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
07:00 PM (IST) Oct 16
எடப்பாடி அணியை சேர்ந்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
06:13 PM (IST) Oct 16
உலக பட்டினிக் குறியீட்டில் 121 நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது. நமது நாட்டில் பட்டினியால் வாடும் மக்கள் 22 கோடி பேரும், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் 33% உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்தி திணிப்பை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. இந்தி திணிப்பை நாங்கள் போராடி தடுப்போம். புதுச்சேரியில் பொதுமக்கள் மரியாதை நிமிர்த்தமாக ஆளுநரை சந்திக்கலாம். ஆனால் மக்களிடம் குறைகேட்க சந்திப்பது தவறு.மேலும் படிக்க
05:52 PM (IST) Oct 16
போபாலில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன பரந்து விரிந்தது. கிட்டத்தட்ட 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்நிறுவனத்தில் சுமார் 100 ஏக்கர பரப்பில் வனப்பகுதி மற்றும் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. மேலும் படிக்க
05:46 PM (IST) Oct 16
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எழுதிய தடையொன்றுமில்லை எனும் புத்தக வெளியீட்டு விழா இன்று கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
05:05 PM (IST) Oct 16
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நாளை காலை தொடங்க உள்ளது. இந்நிலையில் அது தொடர்பாக இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
04:39 PM (IST) Oct 16
நாட்டில் முதல்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தியில் மருத்துவ படிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று
தொடங்கி வைத்தார். ஹிந்தி மொழியில் மருத்துவ கல்வி மேற்கொள்ளும் வகையில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
04:29 PM (IST) Oct 16
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை பெண்ணின் கணவர் பார்த்துள்ளார். அதன் பிறகு வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
03:49 PM (IST) Oct 16
தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
03:37 PM (IST) Oct 16
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 20 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
03:11 PM (IST) Oct 16
இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மேலும் படிக்க
03:00 PM (IST) Oct 16
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நகை வியாபாரி ஒருவர் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் சதிகார கும்பலிடம் 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், இழந்த பணத்தை மீட்டுத் தரவும் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
02:55 PM (IST) Oct 16
இசையமைப்பாளர் அனிருத்தும் CSK அணியின் வெறித்தனமான ரசிகர் ஆவார். CSK அணியின் தீவிர ரசிகராக இருந்தும் அவர் அந்த அணிக்காக எந்த ஒரு பாடலும், தீம் மியூசிக்கும் போட்டுக்கொடுத்தது இல்லை. அதற்கான காரணம் குறித்து அனிருத் ஒரு பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார். மேலும் படிக்க
01:50 PM (IST) Oct 16
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்திற்கான வங்கியின் லாக்கர் சாவி தன்னிடம் உள்ளது என்றும், எனவே ஓ.பன்னீர்செல்வம் வேண்டாம், எடப்பாடி பழனிசாமி வேண்டாம் தானே வங்கிக்கு சென்று தங்கக்கவசத்தை பெற்று தேவர் ஜெயந்தி விழாவில் அணிவிக்க உள்ளதாக அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் தெரிவித்துள்ளார்.
01:36 PM (IST) Oct 16
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதனை தொடர்ந்து தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கி அக்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் படிக்க
01:23 PM (IST) Oct 16
நடிகை ஹேமமாலினி கடந்த 1980-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்துகொண்டு அவருக்கு இரண்டாவது மனைவி ஆனது அனைவரும் அறிந்ததே. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹேமமாலினிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த செய்தி தொகுப்பில் அவரின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
12:57 PM (IST) Oct 16
தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வு அநீதியானது என தெரிவித்துள்ள அன்புமணி உடனடியாக கட்டணத்தை குறைக்க ஆணையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
12:54 PM (IST) Oct 16
அக்.18 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியானது, இரண்டு தினங்களுக்கு பின் அக்.20 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிக கனமழையும், கர்நாடகாவில் சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
12:24 PM (IST) Oct 16
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் - புதுவை மாநிலங்களில் 40 தொகுதியிலும் தி.மு.கூ. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முதல் இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12:11 PM (IST) Oct 16
கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.85 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவை ஏற்கனவே எட்டியதால், அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.மேலும் படிக்க
12:05 PM (IST) Oct 16
இன்று அதிகாலை முதல் சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி பில்டிங் முன் துணிவு படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் அஜித், மஞ்சு வாரியர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இருவரும் முகமுடி அணிந்து தீயணைப்பு வாகனத்தின் மீது அமர்ந்திருந்தபோது எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க
11:38 AM (IST) Oct 16
கேரளாவில் நரபலி கொடுத்த இரண்டு பெண்களின் 10 கிலோ மனித இறைச்சி மற்றும் எலும்பு துண்டுகளை கொலையாளிகளின் வீடுகளில் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் படிக்க..
11:31 AM (IST) Oct 16
புரட்டாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதிலும் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் வந்ததால் மீன்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. சென்னை காசிமேட்டில் நள்ளிரவு முதலே மீன்களை வாங்க மக்கள் அர்வத்துடன் வந்தனர். பொதுவாக நள்ளிரவு இரண்டு மணியளவிலே தொடங்கும் விற்பனையில் பெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள் மீன்களை வாங்கி செல்வது வழக்கம். மேலும் படிக்க
11:02 AM (IST) Oct 16
மத வெறியின் மூலம் மக்களை பிரித்து அழிக்க நினைக்கிற நாசக்கார அரசியல் சங் பரிவாருடையது. இந்தியாவில் நடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் 18 குண்டுவெடிப்புகளில் நேரடித் தொடர்பு கொண்டது சங்கப்பரிவாரம் என திருமாவளவன் விமர்சித்தார்.
10:54 AM (IST) Oct 16
மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.85 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணை ஏற்கனவே முழுகொள்ளவை ஏட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. காவிரி ஆற்றில் வெள்ள கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
10:48 AM (IST) Oct 16
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தின் பிறந்தநாளான இன்று, அவர் சம்பளமே வாங்காமல் செய்து வரும் வேலை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:18 AM (IST) Oct 16
அம்பானியின் கையில் டெலிகாம், அதானியின் கையில் துறைமுகம், டாடாவின் கையில் ஏர்போர்ட் அரசின் கையில் ராமர் கோயில் இதனால் மக்களின் கையில் திருவோடு என நாஞ்சில் சம்பத் விமர்சித்தார்.
மேலும் படிக்க..
10:05 AM (IST) Oct 16
பிக்பாஸ் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. முதல் வாரம் என்பதால் இந்த வார இறுதியில் எலிமினேஷன் கிடையாது. இதனால் போட்டியாளர்களுடன் ஜாலியாக கலந்துரையாடினார் கமல். இன்றைய எபிசோடில் ஜிபி முத்துவை கலாய்க்கும் விதமாக அவருக்கு Bigg Boxx என்கிற பெயருடன் கூடிய தபால் பெட்டி ஒன்றை வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார் ஆண்டவர். மேலும் படிக்க
09:25 AM (IST) Oct 16
பொன்னியின் செல்வன் படம் வெற்றிபெற்றதை அடுத்து, ரஜினியை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது லைகா நிறுவனம். அதில் ஒரு படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் ரஜினியின் 171-வது படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. மேலும் படிக்க
08:38 AM (IST) Oct 16
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் எதுவும் கிடையாது. இதனால் இந்த வாரம் நடந்த நிகழ்வுகள் குறித்தும், டாஸ்க் குறித்து போட்டியாளர்களுடன் ஜாலியாக கலந்துரையாடிய கமல், சிலருக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார். இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு வைல்ட் கார்டு போட்டியாளர் செல்ல உள்ள தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
08:21 AM (IST) Oct 16
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
08:10 AM (IST) Oct 16
புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவடைந்த நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகாலை முதலே மீன்வாங்க அசைவ பிரியர்கள் குவிந்து வருகின்றனர். மீன்வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த வாரத்தை விட விலையும் குறைந்துள்ளது.
07:47 AM (IST) Oct 16
தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் படங்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாக உள்ள படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
07:26 AM (IST) Oct 16
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் வாடகை தாய் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கான ஆதாரங்களை விசாரணை குழுவிடம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி சமர்ப்பித்து, இது குறித்து விளக்கம் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
07:06 AM (IST) Oct 16
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 23ம் தேதி மெல்பர்னில் நடக்கிறது. இரு அணிகளுக்குமே இந்த உலக கோப்பையில் அதுதான் முதல் போட்டி. மேலும் படிக்க