தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட்டின் 'ட்ரீம் கேர்ள்' ஆக வலம் வந்த ஹேமமாலினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..!
சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றிவாகைசூடிய நடிகை ஹேமமாலினி இன்று தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து மழையும் பொழிந்து வருகிறது.
பழம்பெரும் நடிகையும் அரசியல்வாதியுமான ஹேமமாலினி இன்று தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டின் அம்மன்குடி கிராமத்தில் பிறந்த இவருக்கு சினிமாவில் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது பாலிவுட் திரையுலகம் தான். பாலிவுட்டின் 'ட்ரீம் கேர்ள்' ஆக வலம் வந்த இவர் அங்கு ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
நடிகை ஹேமமாலினி கடந்த 1980-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்துகொண்டு அவருக்கு இரண்டாவது மனைவி ஆனது அனைவரும் அறிந்ததே. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹேமமாலினிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த செய்தி தொகுப்பில் அவரின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
அதன்படி நடிகை ஹேமமாலினி பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரர். இவருக்கு ரூ.440 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. நடிகை ஹேமமாலினி நடிப்புத் திறமைக்கு மட்டுமல்ல, புடவைக்கும் பெயர் பெற்ற ஒரு நடிகை ஆவார். ஆரம்பத்தில் அவருக்கு புடவை அணியவே புடிக்காதாம். அவரது தாயார் தான் கட்டாயப்படுத்தி அணிய வைப்பாராம்.
இதையும் படியுங்கள்... ஒரே கேள்வியால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிட்ட கமல்... வைரல் புரோமோ இதோ
அதிலும் ஹேமமாலினி அணியும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளைப் பார்த்து, சினிமா தயாரிப்பாளர்களின் மனைவிகள் சிலர் கேலி செய்ததையும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தான் பாரம்பரிய உடையை உடுத்தியதைப் பார்த்தால் ‘மதராசி வந்திருக்கிறாள்’ என சொல்லி அவர்கள் கேலி செய்ததாக கூறி இருந்தார் ஹேமமாலினி.
நடிகை ஹேமமாலினி தான் சினிமாவில் இந்த அளவு உயரத்தை அடைந்ததற்கு தனது தாயார் தான் காரணம் என்றும் ஆதரவு மற்றும் ஊக்கத்தால் தான் இதெல்லாம் சாத்தியமானது என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கிளாசிக்கல் நடனம் கற்க தன்னை ஊக்கப்படுத்தியது தனது அம்மா தான் என பெருமையுடன் கூறி இருக்கிறார் ஹேமமாலினி. சினிமா, அரசியல் என இரண்டிலும் சாதித்த ஹேமமாலினி இன்று தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையும் படியுங்கள்... அண்ணாசாலையில் துணிவு பட ஷூட்டிங்... மாஸாக வந்த அஜித்தை பார்க்க அலைமோதிய மக்கள் கூட்டம்