இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் ஹிந்தியில் மருத்துவ படிப்பு தொடக்கம்..

நாட்டில் முதல்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தியில் மருத்துவ படிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று 
தொடங்கி வைத்தார். ஹிந்தி மொழியில் மருத்துவ கல்வி மேற்கொள்ளும் வகையில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 
 

Amit shah launches India's first MBBS syllabus in Hindi

அரம்ப கட்டமாக, முதலாமாண்டு மருத்துவ படிப்பை சேர்ந்த உடற்கூறியல், உயிர் வேதியியல், உடலியல் ஆகிய மூன்று பாடங்கள் ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.போபால் காந்தி மருத்துவக் கல்லூரியில் 97 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவினர் கிட்டதட்ட 8 மாதங்களாக ஆங்கிலத்திலிருந்து ஹிந்தி மொழிக்கு மருத்துவ புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்க:கேரள கொடூர நரபலி.! பிரிட்ஜ்-க்குள் இருந்த 10 கிலோ மனித இறைச்சி, எலும்புத் துண்டுக்கள்- அதிர்ச்சியில் போலீஸ்

இந்நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான், மாநில மருத்துக்கல்வி அமைச்சர் விஷ்வாஸ் சாரங் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா,” புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களின் தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விருப்பித்தினை நிறைவேற்றும் வகையில், நாட்டில் முதன் முறையாக மத்திய பிரதேசத்தில் ஹிந்தி மொழியில் மருத்துப் படிப்பு தொடக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும் என்று கூறினார்.
 

மேலும் படிக்க:இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை! டாலர் மதிப்பு தான் உயர்ந்திருக்கிறது! நிர்மலா சீதாராமன் சொன்ன புது விளக்கம்

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios