ஹிந்தி திணிப்பு வேண்டாம்.. இந்தியாவை சிதைத்துவிடும்.. பிரதமருக்கு முதலமைச்சர் பரபர கடிதம்

இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

CM Wrote letter to PM Modi about Imposition of Hindi Language

இதுக்குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:முதலமைச்சர் கனவு காணும் இபிஎஸ்...! சிறைக்கு செல்வது உறுதி- இறங்கி அடிக்கும் நாஞ்சில் சம்பத்

இளைஞர்கள் இந்தி படித்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்குத் தகுதி பெறுவார்கள் என்றும், ஆட்சேர்ப்பிற்கான தேர்வின்போது, கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் வகையில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. . 

நாட்டில் இந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, இந்தி அல்லாத மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தி ஆதிக்கத்திலிருந்து நமது வளமான மற்றும் தனித்துவமான மொழிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன்தான், ஆங்கிலம் இணைப்பு மொழியாக ஆக்கப்பட்டு, மத்திய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கிறது. 

மேலும் படிக்க:பாஜகவுடன் திமுக சமரசமாக சென்று விட்டதா.? நாடாளுமன்ற தேர்தலில் இலக்கு என்ன.?மு க ஸ்டாலின் கூறிய அதிரடி பதில்கள்

இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். 'ஒரே நாடு' என்ற பெயரில், இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள், பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட இந்திய மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை சிதைப்பதோடு, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைப்பதாக அமைந்திடும்.

அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு, தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதும், அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும், அனைத்து மொழிகளைப் பேசுவோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பினை வழங்கி முன்னேற்றத்திற்கான வழிகளை அனைவருக்கும் திறப்பதும்தான் மத்திய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க:தேவர் சிலை தங்க கவசம் யாருக்கு..? ஓபிஎஸ்யையும், இபிஎஸ்யையும் கழட்டிவிட்டு புதிய முடிவெடுத்த அறங்காவலர்

பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், பெருமைவாய்ந்த இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென்று தான் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios