இந்தியை திணிக்க மீண்டும் முயற்சித்தால் டெல்லிக்கே வந்து போராடுவோம்.. அமித்ஷாவை எச்சரித்த உயதநிதி.

இந்தியை திணிக்க முயற்சித்தால் அடுத்து டெல்லிக்கே வந்து போராட்டம் நடத்துவோம் என திமுக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் எச்சரித்துள்ளார். இந்தித் திணிப்பை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என்றும், அதை வலுவாக எதிர்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

If try to impose Hindi again, we will come to Delhi and fight.. Uyadanidhi warned Amit Shah..

இந்தியை திணிக்க முயற்சித்தால் அடுத்து டெல்லிக்கே வந்து போராட்டம் நடத்துவோம் என திமுக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இந்தித் திணிப்பை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என்றும், அதை வலுவாக எதிர்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் இந்தி திணிப்பு பரிந்துரையை எதிர்த்தும், நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு முறையை திரும்பப்பெற வலியுறுத்தியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

If try to impose Hindi again, we will come to Delhi and fight.. Uyadanidhi warned Amit Shah..

இதையும் படியுங்கள்:  குட்நியூஸ்.. தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

இந்த வரிசையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்தித் திணிப்புக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இதில் ஏராளமான திமுக தொண்டர்கள் இதில் பங்கேற்று மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  APJ Abdul Kalam birthday: மக்கள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கனவு தூண்டலும், நிறைவேறாத ஆசையும்!

இந்தித் திணிப்பு மற்றும் ஒரே நுழைவுத்தேர்வு முறையை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டு வருகிறது. ஒரே மொழி ஒரே மதம் ஒரே பண்பாடு என ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பாஜக அரசு செயல்படுத்த முற்படுவதாக திமுக இளைஞரணி குற்றம்சாட்டியுள்ளது. அனைத்து மாநிலங்களில் உள்ள கல்லூரிகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றும் அது மாநில உரிமையை பறிக்கும் செயல் என்றும் திமுக இளைஞரணி கண்டித்துள்ளது.

If try to impose Hindi again, we will come to Delhi and fight.. Uyadanidhi warned Amit Shah..

விரும்பினால் பயில்வோம்.. திணித்தால் விரட்டியடிப்போம்..  நாங்கள் செந்தமிழ் பிள்ளை, இந்தியால் ஆவது ஒன்றுமில்லை, மக்களை சமமாக நடத்து.. ஒரே தேர்வு முறையை நிறுத்து.  இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.. மாநில உரிமையை காப்போம் என 10க்கும் மேற்பட்ட பேனர்கள் வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டம் திடலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய திமுக இளைஞரணிசெ செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இந்தி திணிப்பை  திமுக எப்போதும் எதிர்க்கும் என எச்சரித்துள்ளார். இந்தியை திணிக்க மீண்டும் முயற்சித்தால் டெல்லிக்கே வந்து போராடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.   

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios