APJ Abdul Kalam birthday: மக்கள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கனவு தூண்டலும், நிறைவேறாத ஆசையும்!
கனவு காணுங்கள், கண்களை மூடிக்கொண்டு காணும் கனவை கண்களைத் திறந்து கொண்டு காணுங்கள், கனவு கண்டால்தான் சாதிக்க முடியும் என்று கனவுக்கு இப்படி ஒரு அர்த்தத்தை புகட்டி இளைஞர்களுக்கு புரிய வைத்தவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
இப்படியே கனவு கண்டுகிட்டே இரு! பகல் கனவா போகட்டும்! என்று கனவு என்ற வார்த்தையை மிகவும் இளக்காரமாக நினைத்த காலம் இருந்தது.
ஆனால், கனவு காணுங்கள், கண்களை மூடிக்கொண்டு காணும் கனவை கண்களைத் திறந்து கொண்டு காணுங்கள், கனவு கண்டால்தான் சாதிக்க முடியும் என்று கனவுக்கு இப்படி ஒரு அர்த்தத்தை புகட்டி இளைஞர்களுக்கு புரிய வைத்தவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்று உயிரோடு ஒருவேளை இருந்திருந்தால், நடிகர்கள், நடிகைகள் ஆதர்ஷ நாயகர்களாக கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களின் பெரும்பகுதியினருக்கு கலாமே ஆதர்ஷ நாயகராக இருந்திருப்பார்.
இன்று டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள். மாணவர்கள் மீது அவர் கொண்டிருந்த பற்றால், மாணவர்கள் தினமாகக் கொண்டாடபப்டுகிறது. அவர் குறித்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.
இளமை வாழ்க்கை
இந்தியாவின் கடைக்கோடி எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமம் இல்லை… ஒரு தீவு என்றே சொல்லும் ராமேஸ்வரத்தில்தான் அப்துல் கலாம் 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி சாதாரண முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார்.
ராமேஸ்வரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் பள்ளிப்படிப்பு படித்து, குடும்ப வறுமை காரணாக நாளேடுகளை வீடுவீடாக போட்டு இளம் வயதிலேயே கலாம் உழைத்தார். பள்ளிப்படிப்பை முடித்து, திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் 1954-ல் பட்டம் பெற்றார்.
இயற்பியல் பாடத்தில் அப்துல் கலாமுக்கு நாட்டமில்லாததால், சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்வெளி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து, 1960-ம் பட்டம் பெற்றார்.
அதன்பின், மத்திய அரசின், பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விமான பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக அப்துல் கலாம் சேர்ந்து ராணுவத்துக்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார்.
ஏவுகணை நாயகன்
1969ம் ஆண்டில் இஸ்ரோவுக்கு மாற்றப்பட்ட அப்துல் கலாம், அங்கு உள்நாட்டு ஏவுகணை தயாரிக்கும் லாஞ்சர்கள் தயாரிக்கும் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அப்துல் கலாம் தலைமையில் செயல்பட்ட குழுவினர், கடந்த 1980ம் ஆண்டு ரோஹினி எனும் செயற்கைக்கோளை, எஸ்எல்வி-111 ஏவுகணை மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவினர். அது மட்டுமல்லாமல் அப்துல் கலாம் தலைமையில் போலார் எஸ்எல்வி மற்றும் எஸ்எல்வி 3 ஏவுகணைகளும் வெற்றிகரமாக ஏவப்பட்டன. இதையடுத்து, ஏவுகணை மற்றும் பல்வேறு விண்வெளித் திட்டங்களுக்கு இயக்குநராக அப்துல் கலாமை இயக்குநராக மத்தியஅரசு நியமித்தது.
ரூபாய் நோட்டுக்களில் அப்துல் கலாம் படம்... ரிசர்வ் வங்கி தீவிர பரிசீலனை..!
பொக்ரான் அணுகுண்டு சோதனை
1992 முதல் 1999ம் ஆண்டுவரை பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்த அப்துல் கலாம், பொக்ரான்-2 அணுகுண்டு சோதனையை நடத்திக்காட்டினார். இந்தியாவை உலக நாடுகள் சற்று அச்சத்துடனும், மரியாதையுடனும் பார்க்க வைத்தவர் அப்துல்கலாம்தான். உலக நாடுகள் அறியாவகையில் பொக்ரானில் 2வது அணுகுண்டு சோதனையை அப்துல் கலாம் நடத்திக்காட்டினார்.
ரோஹினி ஏவுகணை வெற்றிகரமாக அமைந்தபின், அடுத்ததாக, பிரம்மோஸ் திட்டத்துக்கு கலாம் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பிரமோஸ் ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்படும் சிவதாணு பிள்ளையும், அப்துல் கலாம் மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருந்தார். இது குறித்து சிவதாணு பிள்ளை தனது “தி பாத் எக்ஸ்ப்ளோர்டு” எனும் நூலில் விரிவாகக் குறிப்பிட்டிருப்பார்.
பிரம்மோஸ் ஏவுகணை
இன்று உலகளவில் பிரம்மோஸ் எனும் சூப்பர்சோனிக் ஏவுகணை பேசப்படுகிறது என்றால் அதற்கு மூலக் காரணம் அப்துல் கலாம்தான். இந்தியாவின் வெற்றிகரமான ஆயுதக்கண்டுபிடிப்புகளில் பிரம்மோஸ் ஏவுகணை முக்கியமானது.
உலகிலேயே தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றில் சூப்பர் சோனிக் ஏவுகணை வைத்திருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் அதற்கு காரணம் அப்துல் கலாம்தான்.
குடியரசுத் தலைவர் பதவியை ஏற்கும் முன்பும் சரி, ஏற்றபின்பும்சரி அப்துல் கலாமின் கனவு இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பதை மூச்சாகக் கொண்டிருந்தார். 2020ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற தீரா ஆசையை கலாம் கொண்டிருந்தார்.
உச்சத்தில் மகிந்திரா பங்குகள்: அப்துல் கலாம் அறிவுரையை நினைவுகூர்ந்த ஆனந்த் மகிந்திரா
வல்லரசு கனவு
இந்தியப் பொருளாதாரம் முன்னேற வேண்டும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும், உற்பத்தியை ஊக்குவிப்பது, சேவை மற்றும் உற்பத்தி துறையை ஊக்கப்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தில் சிறந்த நாடாக இந்தியாவை வளர்க்க வேண்டும் என்பது அப்துல் கலாமின் தீவிர கனவாக இருந்தது.
அப்துல்கலாம் தான் எழுதிய இந்தியா 2020ம் ஆண்டு நூலில், இந்தியாவின் எதிர்காலம் உற்பத்தி துறைதான், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த வேண்டும், இந்தியாவிலிருந்து தயாராகி பொருட்கள் ஏற்றுமதியாக வேண்டும் என்பதை கலாம் கனவாக வைத்திருந்தார். அப்துல் கலாமின் கனவை தற்போது பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறார்.
இளைஞர்களை ஊக்கப்படுத்துவது, மாணவர்களை எதிர்காலத்துக்காக தயார் செய்வது என்பதை அப்துல் கலாம் கடமையாக வைத்திருந்தார். அதனால்தான் குடியரசுத் தலைவராக இருந்தகாலத்திலும், அந்தப்பதவிக்காலம் முடிந்தபின்பும், அவர் பள்ளி, கல்லூரி தொடர்பான விழாக்களுக்கு செல்வதென்றால் அப்துல் கலாம் உற்சாகத்துடன் செல்வார்.
மாணவர்களை பேசவிட்டு, அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார் அப்துல் கலாம். மாணவர்களின் பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்துவதிலும், அவர்களுடன் உரையாடுவதிலும் அப்துல் கலாமிற்கு அலாதி பிரியம். நடிகரின் பேச்சையும், கிரிக்கெட் வீரர் சொல்லும் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த இளைய சமூதாயத்தை 83 வயது இளைஞர் அப்துல் கலாம் தனது பேச்சாலும், எழுச்சிமிக்க உரையாலும், ஊக்கப்படுத்துதலிலும் கட்டிப்போட்டார், அவர்களை தேசத்துக்காக நல்வழிப்படுத்தினார்.
என்றும் நினைவில் இருந்து நீங்காத அப்துல் கலாம்...! அறிய புகைப்பட தொகுப்பு!
அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல பொருளாதார வல்லுநர், பேச்சாளர், எழுத்தாளர் ஆசிரியராகவம் திகழ்ந்தார். அப்துல் காலம் தனது அறிவுரைகளையும், அறிவுசார் கருத்துக்களையும், கண்டுபிடிப்புகளையும் தேசத்துக்காக விட்டுச் செல்லவில்லை. அவரின் சந்தையில் விளைந்த ஏராளமானநூல்களையும் எதிர்வரும் இளைய சமூகத்துக்காக விட்டுச் சென்றுள்ளார்.
கலாம் எழுதிய நூல்கள்
அதில் முக்கியமானவை, “இந்தியா 2020-தி விஷன் ஃபார் தி நியூ மல்லினியம்”, “விங்ஸ் ஆஃப் பயர்-சுயசரிதை”, “இக்நைட்டட் மைன்ட்ஸ்: அன்லீஸிங் தி பவர் வித்இன் இந்தியா”, “தி லுமினோஸ் ஸ்பார்க்: ஏ பயோகிராபி வெர்ஸ் அன்ட் கலர்”, “கயட் சோல்ஸ்: டயலாக்ஸ் ஆன்தி பர்பஸ் ஆப் லைப்”, “மிஷன் ஆப் இந்தியா: ஏ விஷன் ஆப் இந்தியன் யூத்”, “யுஆர் பார்ன் டூ பிளாஸம்: டேக் மை ஜர்னி பியாண்ட்”, “தி சயின்டிபிக் இந்தியா: தி ட்வென்டி பர்ஸ் சென்சூரி கயிட் டூ தி வேர்ல் அரவுண்ட அஸ்”, “பெயிலியர் டூ சக்சஸ்: லிஜன்டரி லிவ்ஸ்”, “டார்கெட் 3 பில்லியன்”, “யூஆர் யுனிக்: ஸ்கேல் நியூ ஹெயிட்ஸ் பை தாட்ஸ் அன்ட் ஆக்சன்ஸ்”, “டர்னிங் பாயின்ட்: ஏ ஜர்னி த்ரூ சேலஞ்சஸ்”, “இன்டோமிடபிள் ஸ்பிரிட்”, “ஸ்பிரி்ட் ஆப் இந்தியா”, “தாட்ஸ் ஃபார் சேஞ்ச்: வி கேன் டூ இட்”, “மை ஜர்னி: ட்ரான்ஸ்பார்மிங் ட்ரீம்ஸ் இன்டூ ஆக்சன்ஸ்”, “கவர்னன்ஸ் ஃபார் க்ரோத் இன் இந்தியா”, “மேனிவெஸ்டோ ஃபார் சேஞ்ச், போர்ஜ் யுவர் பியூச்சர்,கேன்டிட், போர்த்ரைட், இன்ஸ்பைரிங்”, “ஏ விஷன் பார் டுமாரோஸ் இந்தியா”, “தி கய்டிங் லைட்: ஏ செலக்ஷன் ஆப் கொட்டேஷன் பிரம் மை பேபரேட் புக்ஸ்”, “சயின்ட்டிபிக் பாத்வே டூ ஏ பிரைட் பியூச்சர்”, “தி பேமலி அன்ட் தி நேஷன்”, “டிரான்ஸ்டென்ஸ் மை ஸ்பிரிச்சுவல் எக்ஸ்பீரியன்ஸ்” ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்
கனவு இந்தியா தயார்
அப்துல் கலாம் கன்ட கனவு இந்தியா இன்னும் உருவாகவில்லை, ஆனால் அதை நோக்கிய பாதையில் சென்று கொண்டிருக்கிறது, உருவாகி வருகிறது. அவரின் கனவு தேசத்தை உருவாக்க வேண்டிய அவரை ஆதர்ஷ்ச நாயகராக மனதில் வைத்திருக்கும் ஒவ்வொரு இளைஞரின் கடமையாகும்.
அப்துல் கலாம் சிலையருகே பைபிள்,குர்ஆன் வைக்கப்பட்டது!!!
நிறைவேறாத ஆசை
இந்தியாவைப் பற்றி கனவு கண்ட அப்துல் கலாமின் ஒரே ஆசை மட்டும் கடைசி வரை நிறைவேறவில்லை. அப்துல் கலாமின் உதவியாளராக இருந்த பால்சிங், அவர் குறித்த உருக்கமான விஷயத்தை ஒருமுறை தெரிவித்தார். அது “அப்துல் கலாமுக்கு கடைசிவரை ஒருவருத்தம் இருந்தது, அதுஎன்னவென்றால், தனது பெற்றோருக்கு வாழ்நாள்முழுவதும் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைக்கச்செய்யும் வகையில் வசதியை செய்ய முடியவில்லை என்பதுதான். இதை அடிக்கடி என்னிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்
தேசத்தின் ஆசையை நிறைவேற்றி, இளைஞர்களின் ஆசையை,கனவை தூண்டிவிட்ட கலாமின் ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை!
- a. p. j. abdul kalam
- a.p.j abdul kalam
- abdul kalam
- abdul kalam birthday
- abdul kalam birthday date
- abdul kalam birthday status
- abdul kalam quotes
- abdul kalam speech
- about apj abdul kalam
- apj abdul kalam
- apj abdul kalam biography
- apj abdul kalam birthday
- apj abdul kalam on birthday
- apj abdul kalam quotes
- apj abdul kalam speech
- apj abdul kalam status
- apj abdul kalam story
- dr apj abdul kalam
- dr. apj abdul kalam
- missile man of india
- world students day
- world students day 2022