anand mahindra tweet: உச்சத்தில் மகிந்திரா பங்குகள்: அப்துல் கலாம் அறிவுரையை நினைவுகூர்ந்த ஆனந்த் மகிந்திரா
anand mahindra tweet :மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உயர்வை நேற்று எட்டி, ரூ.1006.70க்கு விற்பனையானது. இந்த உச்சத்தைக் கண்டு மகிழ்ந்த குழுமத்தலைவர் ஆனந்த் மகிந்திரா, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் அறிவுரையை நினைவுகூர்ந்துள்ளார்.
மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உயர்வை நேற்று எட்டி, ரூ.1006.70க்கு விற்பனையானது. இந்த உச்சத்தைக் கண்டு மகிழ்ந்த குழுமத்தலைவர் ஆனந்த் மகிந்திரா, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் அறிவுரையை நினைவுகூர்ந்துள்ளார்.
மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று சந்தையில் உச்சத்தைத் தொட்டது. கடந்த 2019ம் ஆண்டுக்குப்பின், மகிந்திரா பங்கு விலை ரூ.984யைத் தொட்டது. அதற்கு அதிகமாக சென்று நிலைபெற்றது.
இதுகுறித்து மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுடன் பேசியபோது, அவர் கூறிய அறிவுரைகளை நினைவுகூர்ந்துள்ளார். ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 2019ம் ஆண்டு மகிந்திரா அன்ட் மகிந்திரா பங்குகள் ரூ.984 என்று விலையில் உச்சத்தில் இருந்து திடீரென மடமடவெனச் சரிந்தது.
அந்த ஆண்டில் ஒரு கருத்தரங்கில் நான் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுடன் பங்கேற்றேன். அப்போது எனக்கு அப்துல் கலாம், “ மலையின் உச்சத்தைப்பிடிக்கப் பாருங்கள், துணிச்சலாக கனவு காணுங்கள்” என்று அறுவுறுத்தினார். அந்த அறிவுரையைத்தான் என்னுடைய குழுவினருக்கு நினைவூட்டுகிறேன்.
அந்தக் கூட்டம் முடிந்ததும் எனக்குள் ஒரு முடிவு எடுத்தேன் மீண்டும் மகிந்திரா பங்குகளை உச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் எனத் தீர்மானித்தேன். நிறுவனத்தின் 75-வது ஆண்டுவிழாவில் மகிந்திரா பங்குகள் விலையை உச்சத்துக்கு கொண்டுவர எண்ணினேன். அந்தக் காலக்கெடு முடிந்துவிட்டாலும், அந்த ஆண்டைவிட கூடுதலாக ஓர் ஆண்டு எடுத்துள்ளோம்.
மகிந்திரா குழுமத்தின் புதிய அதிகாரிகள் குழு பதவி ஏற்று, இன்று பங்கு விலையை ரூ.1000க்கும் அதிகமாகக் கொண்டு வந்துள்ளனர்”எனத் தெரிவித்துள்ளார்.
மகிந்திரா குழுமத்தின் பங்குகள் நேற்று 52 வாரங்களில்இல்லாத உயர்வைப் பெற்றமைக்கு எஸ்யுவி வகை கார்கள் மூலம் கிடைத்த வருவாய் அதிகரிப்புதான் காரணம்.
மகிந்திரா நிறுவனத்தின் மேலாளர் சிஇஓ அனிஷ் ஷா , இயக்குநர் ராஜேஷ் ஜேஜுருக்கர் ஆகியோருக்கு குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “ நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவுக்குள் மகிந்திரா பங்கு விலையை மீண்டும் உச்சத்துக்கு கொண்டுவர எண்ணினேன்.
ஆனால், காலக்கெடு கடந்து ஓர் ஆண்டுக்குப்பின் இப்போது அது நினவாகியுள்ளது. மகிந்திரா பங்கு விலை 1000 ரூபாயை எட்டியுள்ளது. மகிந்திரா நிறுவனத்தை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு சென்ற அனிஷ் ஷா ராஜேஷ் ஜேஜுருக்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” எனத் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.