பாஜகவுடன் திமுக சமரசமாக சென்று விட்டதா.? நாடாளுமன்ற தேர்தலில் இலக்கு என்ன.?மு க ஸ்டாலின் கூறிய அதிரடி பதில்கள்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் - புதுவை மாநிலங்களில் 40 தொகுதியிலும் தி.மு.கூ. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முதல் இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிடவியல் கோட்பாடுகள் - நிராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் பதில்களில் மூலம் கூறியுள்ளார். அதில் கேட்கப்பட்ட பல்வேறு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு.
1. இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். கழகத்தை வழிநடத்த வருங்காலத்தில் புதிய திட்டம் ஏதேனும் வைத்துள்ளீர்களா?
பதில்; அண்ணா வழியில் அயராது உழைப்போம்! கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்! என்பதன் அடிப்படையிலான திராவிட மாடல்தான் எப்போது என்னுடைய பானத கொள்கையும் கோட்பாடும் எவ்வனவு முக்கியமோ, அதே அளவுக்கு கழகத் தொண்டர்களுக்குள், உடன்பிறப்பு என்ற உணர்வும் தம்முடைய இயக்கத்தில் என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பொதுக்குழுனில் பேசும்போதுகூட கொள்கையையும் நட்பையும்தான் அதிகமாக வலியுறுத்திப் பேசினேன். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் வழிகாட்டியாக கழகம் இருக்க வேண்டும். இனித் தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆளும் என்கிற நிலை நீடிக்க வேண்டும். என்னிய இருந்து தொடங்கி கடைக்கோடி தொண்டன்னரை இந்த இலட்சியத்துக்காக உழைக்க வேண்டும்.
இதுதான் என்னுடைய விருப்பம்!
2 நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற முழக்கத்தை வைத்துள்ளீர்கள். அதனை நிறைவேற்றுவதற்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான கழகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?
பதில் ; தமிழகம் - புதுவை மாநிலங்களில் 40 தொகுதியிலும் தி.மு.கூ. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முதல் இலக்கு, இந்தியா முழுமைக்கும் சமூகநீதியில் - கூட்டாட்சிக் கருத்தியலில் நம்பிக்கை கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்பது நமது அடுத்த இலக்கு, இதற்கான அரசியல் நடவடிக்கைளில் தேர்தல் நேரத்தில் இறங்குவோம்,
3. கோபாலபுரம் to கோட்டை இந்த அரை நூற்றாண்டுகால பொது வாழ்க்கையை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?
பதில் ; பொதுவாழ்க்கை என்பது முன்கிரீடம் போல என்று சொல்வார்கள். என்னுடைய பொதுவாழ்வுக்கு அங்கீகாரம் என்பது, தலைவர் கலைஞர் சொன்ன, “உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என்பதுதான். என்னைப் பொறுத்தவரையில், அந்த உழைப்பால் மக்களுக்கு விளையும் நன்மைகள் என்ன என்பதில்தான் என்னுடைய பொதுவாழ்க்கை அடங்கி இருக்கிறது என கோபாலபுரம் இளைஞர் திமுக - வை ஆரம்பித்த நான், பல்வேறு பொறுப்புகளைக் கடந்த 50 ஆண்டுகளில் சுமந்து, திறம்படப் பணியாற்றிய காரணத்தால்தான் இன்றுஎண்ணுகிறேன். கழகப் பொறுப்புகளைப் பொறுத்தவரையில், கோபாலபுரத்தில் 13 வயது சிறுவனாக, கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு இரண்டாவது முறையாகக் உடன்பிறப்புகளால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அதேபோல் மக்கள் பணியைப் பொறுத்தவரை, மேயராக நான் ஆற்றிய பணிகளுக்குத் தலைநகர் சென்னையின் வளர்ச்சியே சாட்சியாக இருக்கிறது. அமைச்சராக, துணை முதலமைச்சராக என் நெஞ்சத்திற்கு கழக நெருக்கமான திட்டங்களைப் பல முறை எடுத்துக் கூறி இருக்கேன்.
பெரியகுளம் பண்ணை வீட்டில் முக்கிய ஆவணங்கள் கொள்ளையா..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்
4. உங்கள் மீது அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கொச்சையாக விமர்சனம் செய்பவர்களை எளிதாகக் கடந்து போகிறீர்களே, அது எப்படி முடிகிறது?
பதில்; ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்கிறேன். காழ்ப்புணர்ச்சியோடு பரப்பக்கூடிய அவதூறுகள் குறித்து ஏற்கனவே நாள் பதில் சொல்லிவிட்டேன்.
5. 24 மணிநேரமும் பணியாற்றும் முதல்வர் என்ற பெயரை எடுத்திருக்கிறீர்கள். அதற்கேற்ப உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ளும் ரகசியம் என்ன என்பதை இளைய தலைமுறைக்குத் தெரிவிப்பீர்களா?
பதில் ; எல்லோரும் இதனை ஆச்சரியமாகத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.அதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நான் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கேன். முன்பு கட்சிப் பணி மட்டும் இருந்தது இப்போது நிர்வாகப் பணியும் சேர்ந்திருக்கிறது. அதனால் வேலைகள் அதிகமாகி இருக்கின்றன. அதனை மிகச் சரியாகப் பிரித்து நேரம் ஒதுக்கி செயல்படுகிறேன். காலையில் உடற்பயிற்சி - மாலையில் நடைப்பயிற்சி, சரியான - அளவான உணவுஎன எனது உடல் நலத்தில் எப்போதும் கவனமாக இருப்பேன்.வேலைகள் அதிகமாக இருந்தாலே உடல் சோர்வு வராது. இதில் ரகசியம் எதுவும் இல்லை.
6. நீங்கள் திராவிட மாடல் ஆட்சி என்கிறீர்கள். ஒன்றிய பா.ஜ.க அரசு கவர்னரை வைத்து இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
பதில் ; இதை எதிர்கொண்டுதானே ஆட்சியை தடத்திக்கொண்டு இருக்கிறோம்.நியமனப் பதவியான ஆளுநருக்கு உரிய பொறுப்புகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு உரிய கடமைகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், நமது அரசியல் சட்டம் மிகத் தெளிவாகவே வரையறுத்துக் கூறியுள்ளது. அதைப் புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்சினை இல்லை. தேவையற்ற சர்ச்சைகளுக்கும் இடமிருக்காது. அதுமட்டுமில்லாமல், ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் 70 சதவீதத்துக்கும்மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் சேய்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றத்திலேயே இது பற்றி நாள் சொல்லி இருக்கிறேன்.
7. ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் எவையெவை சாதனைகளாக இருக்கின்றன? எவையெவை சவால்களாக இருக்கின்றன?
பதில் ; மக்கள் முகங்களில் நான் காணக்கூடிய சிரிப்புதான் என்னுடைய சாதனை! நிதி நெருக்கடிதான் இன்னும் இருக்கிற சவால்!
8. தமிழ்நாடு முழுவதும் சாலைகள் எப்போது சரி செய்யப்படும்? மழைநீர் வடிகால்பணிகள் பணிகள் அனைத்தும் முழுமையாக எப்போது முடியும் ?
பதில் ; பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியில் அதுனால்தான் இந்த நிலைமை காணப்படுகிறது. 2021 மே மாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர் கொரோனா இரண்டாவது அலையை நாம் எதிர்கொண்டோம். இரண்டாவது அலையில் இருந்து மீண்ட தகுணத்தில், கடுமையான மழையை எதிர்கொண்டோம். அப்போது, ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியதால், பொதுமக்கள், கடுமையான இன்னல்களுக்கு உள்ளானார்கள்.நமது அரசு அமைந்ததும், கொரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்டதும்,நமது அரசு அமைந்ததும், கொரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்டதும், இயற்கைப் பேரிடரால் இனி சென்னை மக்கள் எந்தக் காலத்திலுமே துயரப்படாத வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என முடிவெடுத்தேன். கடந்த ஓராண்டு காலத்தில், வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னையில மட்டும் 4560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நானே நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறேன். மழைக்கு முன்னால் வடிகால் பணிகளை உத்தரவிட்டிருக்கிறேன். விரைந்து செயல்படுவோம்! முடிக்க வேண்டும் என்று
9.நீட் தேர்வுல இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா?
பதில்; முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காலதாமதம் ஆவதாலேயே நடக்காது என்று முடிவுக்கு வராதீர்கள்.நீட் தேர்வை வைத்து மிகக் கொடூரமான சமூக அநீதியை இழைத்துக்கொண்டு இருக்கிறது பா.ஜ.க. வரும் நாடாளுமன்றத் தேர்தல் அதற்குப் பாடம் புகட்டுவதாக
இருக்கும்.
10. திராவிட இயக்கக் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க திமுக தவறிவிட்டதா நீங்க நினைக்கிறீங்களா?
பதில்; இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி நடத்துகிற திராவிட பயிற்சிப் பாசறைக் கூட்டங்களையும் - தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா நடத்திய திராவிட மாதம் கூட்டங்களையும் நீங்கள் கவனிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். இளைஞரணி சார்பாக, கடந்த ஜூலை 5 ஆம் தேதி தொடங்கி, கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும், உணர்ச்சியோடு நடத்தப்பட்டு வருது. இத்தகைய பாசறைக் கூட்டங்கள் 187 தொகுதிகளில் இதுவரை நடந்திருக்கிறது. மீதமிருக்கும் பகுதிகளிலும் அடுத்தடுத்து நடத்தப்பட இருக்கிறது.
11. பா.ஜ.க.வுடன் தி.மு.க. சமரசமாகப் போய்விட்டதாகச் சிலர் சொல்கிறார்களே?
பதில்; இப்படிச் சொல்லுவதை பா.ஜ.க.வே ஏற்றுக்கொள்ளாது! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
தேர்தலில் திமுகவை தோற்கடிக்க திட்டமிட்டோமா..? நடந்தது என்ன..? திருமாவளவன் கூறிய ரகசிய தகவல்