இந்த விஷயத்தில் செம்ம சூப்பர்ங்க.. ஸ்டாலின் அரசை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய மத்திய அமைச்சர்..
ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.
ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலம் தூய்மையான குடிநீர் தமிழக அரசு வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் குறிப்பாக தமிழகத்தில் பாஜக, திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, ஆட்சி நிர்வாகம் சரி இல்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில்தான் சென்னை எம்ஆர்சி நகரில் நட்சத்திர ஓட்டலில் நடந்த ஜல் ஜீவன் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழக அரசை வானுயர பாராட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்: டெல்லிக்கு அவசரமாக புறப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ..! உள்துறை அமைச்சரை சந்திக்கிறாரா.?
அந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது, தூய்மையான தடையில்லாத குடிநீர் வழங்குவது குறித்தும் காவிரி போன்ற முக்கிய ஆறுகளில் ஓடும் உபரி நீரை அதன் அருகில் உள்ள பகுதிகளில் தேக்கி வைத்து நிலத்தடி நீரை உயர்த்துவது போன்றவற்றைக் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: இந்தி திணிப்பை கண்டித்து அக்.15 அன்று ஆர்ப்பாட்டம்... அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின்!!
அதன்பின்னர் அக்கூட்டத்தில் பேசிய ஜல் சக்தி துறை அமைச்சர், ஜல் ஜீவன் துறையில் அதாவது ஊரக பகுதிகளில் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை தமிழகத்தின் மொத்த இலக்கில் 55.5 சதவீதம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய சராசரி என்பதே 53. 96% தான், தேசிய சராசரியை விட அதிக இணைப்புகளை தமிழக அரசு கொடுத்துள்ளது. ஏற்கனவே இதற்காக தமிழக அரசைப் பாராட்டி அக்டோபர் 2ஆம் தேதி விருது வழங்கப்பட்டது.
ஆனாலும் நடப்பாண்டில் 28 லட்சம் இணைப்புகள் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 16 லட்சம் இணைப்புகள் இப்போதே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படும் இவ்வாறு அவர் கூறினார்.