Asianet News TamilAsianet News Tamil

இனி இப்படி ஒரு தற்கொலை நிகழக்கூடாது... தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!!

பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

such a suicide should not happen again says ramadoss
Author
First Published Oct 12, 2022, 11:47 PM IST

பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்த வேல்முருகன் என்ற வாலிபர் நேற்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்ற வடக்கு கோட்டை சாலையில் இருக்கும் நுழைவாயில் முன்பு திடீரென்று தீக்குளித்தார். அதோடு பேசிய அவர், நான் மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்தவன்.  என் மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களில் அலைந்து பார்த்து விட்டேன்.  இதுவரைக்கும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. இந்த மன உளைச்சல் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்.

இதையும் படிங்க: ஒடிசாவில் ஒரு ஸ்வப்னா… அரசியல் புள்ளிகளை தன் வலையில் சிக்கவைத்து மிரட்டல்!!

என்னோட இந்த முடிவின் மூலம் இனிமேல் பொதுமக்களுக்கு உடனுக்குடன் சாதிச் சான்றிதழ் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார். இதை அடுத்து அவர் தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் உயிரிழந்தார். இந்த நிலையில் இனி இப்படி ஒரு தற்கொலை நிகழக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், மலைகுறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்காத மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: காலிஸ்தானி பிரிவினைவாத விவகாரம்... மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு... முழு விவரம் உள்ளே!!

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கொண்டாரெட்டி, மலைக்குறவர் ஆகிய இரு சாதிகளும் பழங்குடியினர் பட்டியலில் முறையே 12,23 ஆகிய இடங்களில் உள்ளன. விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில், சாதி சான்றிதழ் மறுக்கப்படுவது தான் தற்கொலைகளுக்கு காரணம் ஆகும்.  பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக இனியும் ஒரு தற்கொலை நிகழக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios