MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • திமுகவுக்கு சவாலாக இருக்கும் 10 தொகுதிகள்.! இந்த தொகுதிகளில் தலைகீழா நின்னாலும் திமுகவால் ஜெயிக்கவே முடியாது.!

திமுகவுக்கு சவாலாக இருக்கும் 10 தொகுதிகள்.! இந்த தொகுதிகளில் தலைகீழா நின்னாலும் திமுகவால் ஜெயிக்கவே முடியாது.!

10 Constituencies the DMK Can Never Win : தமிழக அரசியலில் திமுக, பல தொகுதிகளில் தொடர் வெற்றிகளை கொடுத்தாலும், குறிப்பிட்ட தொகுதிகள் அக்கட்சிக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Mar 19 2026, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
10 Constituencies the DMK Can Never Win
Image Credit : Twitter

10 Constituencies the DMK Can Never Win

தமிழக அரசியலில் 75 ஆண்டுகள் பழமையான கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகால அரசியலில் திமுக, அதிமுக என மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வருகின்றன. 

இருப்பினும் திமுகவிற்கு சில தொகுதிகளில் வெல்லவே முடியாத சூழல் இருக்கிறது. சாதிய கட்டமைப்பு, வலுவான எதிர்க்கட்சி மனப்பான்மை அல்லது அந்த தொகுதியில் தனித்துவமான அரசியல் வரலாறு என ஏதோ ஒரு காரணம் திமுகவின் கனவை சிதைத்துக் கொண்டே வருகிறது. 

திமுக எத்தனை யூகங்களை வகுத்தாலும், தலைகீழாக நின்றாலும் இந்த தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதாக உள்ளது. அந்த தொகுதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

211
எடப்பாடி
Image Credit : Asianet News

எடப்பாடி

எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டையாகவும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியாகவும் விளங்கி வருகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அலை வீசியபோதும், இங்கு எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொங்கு மண்டலத்தின் சாதி ரீதியான வாக்கு வங்கி மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் தனிப்பட்ட செல்வாக்கை மீறி திமுக இங்கு கொடிநாட்டுவது மிக கடினமாக இருக்கிறது.

Related Articles

Related image1
4 இடங்களில் மட்டுமே வெற்றி.! இளைஞரிடம் படுதோல்வியை சந்தித்த ஜெயலலிதா.! தமிழ்நாட்டை அதிர வைத்த 1996 தேர்தல்.!
Related image2
நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! ஜெயலலிதா கைதும், அதிரடி திருப்பங்களும்..! நடந்தது இதுதான்.!
311
கோபிசெட்டிபாளையம்
Image Credit : Asianet News

கோபிசெட்டிபாளையம்

கோபிசெட்டிபாளையம் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ செங்கோட்டையன் போட்டியிடும் தொகுதியாகும். 1977 முதல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வரும் செங்கோட்டையன் பலமுறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். 10 முறைக்கும் மேலாக போட்டியிட்டு பலமுறை வெற்றிக் கனியை ருசித்தவர். தற்போது இவர் விஜயின் தவெகவில் இணைந்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியும் திமுகவிற்கு கனவாகவே இருந்து வருகிறது.

411
தொண்டாமுத்தூர்
Image Credit : Asianet News

தொண்டாமுத்தூர்

பொதுவாகவே கோவை உள்ளிட்ட, கொங்கு மண்டலத்தில் உள்ள பல தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. கோயமுத்தூர் மண்டலத்தில் அதிமுகவின் வலுவான முகமாக எஸ்.பி வேலுமணி இருந்து வருகிறார். 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். வேலு மணியின் தனிப்பட்ட செல்வாக்கு அதிமுக தொண்டர்களின் ஆதரவு காரணமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது என்பது கடினமான காரியமாக இருந்து வருகிறது.

511
குமாரபாளையம்
Image Credit : our own

குமாரபாளையம்

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2006, 2011, 2016, 2021 ஆகிய நான்கு தேர்தலிலும் பி. தங்கமணி வெற்றி பெற்று இருக்கிறார். நாமக்கல் மற்றும் குமாரபாளையம் ஆகியவை அதிமுகவின் எஃகு கோட்டையாக திகழ்கிறது. தங்கமணியை எதிர்த்து குமாரபாளையத்தில் திமுக வெற்றி பெறுவது என்பது சவாலான காரியமாக இருந்து வருகிறது.

611
ராயபுரம்
Image Credit : our own

ராயபுரம்

சென்னை திமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்டாலும் ராயபுரம் நீண்ட காலமாகவே அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் டி ஜே குமாரின் பலமான தளமாக இந்த தொகுதி விளங்கி வருகிறது. 2021ல் திமுக வென்றாலும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மீனவர் சமுதாயத்தின் வாக்குகள் மற்றும் அதிமுக மீதான விசுவாசம் காரணமாக இந்த தொகுதி எப்போதும் திமுகவிற்கு சவாலான களமாக இருந்து வருகிறது.

711
உடுமலைப்பேட்டை
Image Credit : our own

உடுமலைப்பேட்டை

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டையில் அதிமுகவின் முகமாக உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார். இந்த தொகுதியில் தொடர் வெற்றிகளையும் பெற்று வருகிறார். தொகுதி முழுவதும் இவருக்கு இருக்கும் தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களின் பலம் திமுகவை இந்த தொகுதியில் அண்ட விடுவதில்லை. எவ்வளவு தான் நட்சத்திர வேட்பாளர்களை நிறுத்தினாலும் திமுக இங்கு இரண்டாம் இடமே பிடிக்க முடிகிறது.

811
கன்னியாகுமரி
Image Credit : our own

கன்னியாகுமரி

தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி மற்றும் கன்னியாகுமரியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மதரீதியான வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. திமுக அதிமுகவை விட பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை போட்டியாளர்களாக உள்ளனர். திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இத்தொகுதியை அதிகம் ஒதுக்குகிறது. திமுகவின் நேரடி போட்டி இங்கு எடுபடுவதில்லை என்பதே நிதர்சனம்.

911
கோவை தெற்கு
Image Credit : Asianet News

கோவை தெற்கு

கோவை தெற்கு ஒரு நகர்ப்புற தொகுதி மட்டுமல்லாமல் விஐபி தொகுதியாகவும் விளங்கி வருகிறது. பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன், கமலஹாசன் போன்றவர்கள் இந்த தொகுதியில் போட்டியிட்டனர். 2021ல் கமல்ஹாசன் போன்றவர்கள் பிரித்த வாக்குகளால் திமுக இங்கு பின்னுக்கு தள்ளப்பட்டது. கோயமுத்தூர் தொகுதியில் நகரவாசிகளின் மனநிலை திமுகவிற்கு சாதகமாக மாறுவது இங்கு அரிதாகவே காணப்படுகிறது.

1011
போடிநாயக்கனூர்
Image Credit : Asianet News

போடிநாயக்கனூர்

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் கோட்டையாக போடிநாயக்கனூர் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் பெரும்பாலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்ற வருகின்றனர். 2021 தேர்தலில் பல களேபரங்களுக்கு மத்தியிலும் போடிநாயக்கனூரில் அவர் வெற்றி பெற்றிருந்தார். தற்போது அவர் திமுகவிற்கு சென்று உள்ளதால் இந்த தொகுதி திமுகவின் வசமாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1111
வேதாரண்யம்
Image Credit : our own

வேதாரண்யம்

காவிரி டெல்டா பகுதியில் பொதுவாக திமுகவின் கோட்டையாக கருதப்பட்டாலும் வேதாரண்யத்தில் ஓ.எஸ் மணியனின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அதிமுக இந்த வலுவாக உள்ளது. கடற்கரை கிராம மக்களின் வாக்குகள் மற்றும் விவசாயிகளின் ஆதரவு அதிமுக பக்கம் உள்ளது. இந்த தொகுதியில் திமுகவின் யூகங்கள் பலமுறை தோல்வி தழுவியுள்ளன. வலுவான வேட்பாளர்களை இறக்கிய போதும் வேதாரண்யம் தொகுதியில் திமுகவின் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

திமுக சவால்களுக்கான முக்கிய காரணங்கள்

இதேபோல் கோவில்பட்டி, விராலிமலை, சங்கரன்கோவில், ஆலங்குளம், ஸ்ரீவைகுண்டம், பல்லடம் மேட்டுப்பாளையம் போன்ற தொகுதிகள் அதிமுக வலுவாக இருக்கும் தொகுதிகளாகும். இங்கு அதிமுக பாஜகவின் கூட்டணி வலுவாக இருப்பது முக்கிய காரணமாகும். மேற்கு மண்டலத்தில் சாதிய வாக்குகளை ஒருங்கிணைப்பதில் திமுக இன்னும் பின்தங்கி உள்ளது. சில தொகுதிகளில் வேட்பாளர் தேர்வும் திமுகவிற்கு பின்னடைவை தருகிறது. எம்ஜிஆர் காலம் முதல் இந்த தொகுதிகளில் அதிமுகவிற்கு இருக்கும் பாரம்பரிய வாக்குகள் இன்னும் சிதையாமல் இருப்பதும் அதிமுக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
அரசியல் சுவாரஸ்யம்
அரசியல்ல சாதாரணமப்பா!
திமுக
திமுக கூட்டணி கட்சிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! ஜெயலலிதா கைதும், அதிரடி திருப்பங்களும்..! நடந்தது இதுதான்.!
Recommended image2
விஜயின் அரசியல் ரூட் க்ளியர்.! தனி ஒருவனாக வருவேன்.! தளபதியின் முடிவுக்கு இதுதான் காரணம்.!
Recommended image3
கட்சியில் பணம் இல்லை.. திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள்.. உருக்கமாக பேசிய சீமான்!
Related Stories
Recommended image1
4 இடங்களில் மட்டுமே வெற்றி.! இளைஞரிடம் படுதோல்வியை சந்தித்த ஜெயலலிதா.! தமிழ்நாட்டை அதிர வைத்த 1996 தேர்தல்.!
Recommended image2
நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! ஜெயலலிதா கைதும், அதிரடி திருப்பங்களும்..! நடந்தது இதுதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved