டெல்லிக்கு அவசரமாக புறப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ..! உள்துறை அமைச்சரை சந்திக்கிறாரா.?
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவசர பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆளுநர் - திமுக மோதல்
தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழக அமைச்சர்கள் மீதான புகார் தொடர்பாக அவ்வப்போது ஆளுநரை சந்தித்து கூறி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் ஆளுநர் மாளிக்கைக்கு சென்று ஆர்.என் ரவியோடு அரசியல் பேசியதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அரசு சார்பாக நடைபெறும் நிகழ்வுகளில் தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை புகுத்துவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்தனர்.
தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து இந்த புத்தகம் பேசுகிறது. ஆனால் இந்த புதக்கத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைப்பதாக ஆளுநர் தெரிவித்து இருந்தார்.
வாயா போயானு பேசவே பயமாக உள்ளது..! ஸ்டாலின் அதிரடியால் அதிர்ந்து போன பொன்முடி
இது போன்ற கருத்துகளால் தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பல்கலைகழக துணை வேந்தர் நியமிப்பது தொடர்பாக தமிழக அரசின் முடிவு எடுக்கும் வகையில் சட்ட மசோதா, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதா ஆளுநரின் ஆய்வுக்காக உள்ளது. இதற்க்கு எந்தவித ஒப்புதலும் அளிக்காமல் ஆளுநர் காக்க வைப்பதாகவும் திமுக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை மறுக்கும் ஆளுநர் மாளிகை வட்டாரம் தனது மனவியோடு ஆர் என் ரவி டெல்லி சென்றுள்ளதாகவும், அங்கு தனது குடும்ப நிகழ்வில் ஆளுநர் பங்கேற்ப இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
திருக்குறளை தீர்த்துக்கட்டவே தமிழகம் வந்திருக்கிறார் ஆர்.என் ரவி..!- முரசொலி கடும் தாக்கு