வாயா போயானு பேசவே பயமாக உள்ளது..! ஸ்டாலின் அதிரடியால் அதிர்ந்து போன பொன்முடி
வாயா போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருப்பதாக தெரிவித்த பொன்முடி, மு.க.ஸ்டாலின் தன்னை பார்த்து அப்படி பேசாதீர்கள் என சொல்லி விட்டதாக கூறியுள்ளார்.
அமைச்சர்கள் சர்ச்சை பேச்சு
திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் பேச்சு சமீப காலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக அரசு சார்பாக பெண்களுக்கு இலவசமாக செயல்படுத்தி வரும் திட்டமான பேருந்து பயண திட்டத்தை ஓசி டிக்கெட் எனக்கூறி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கிராம சபை கூட்டத்திலும் பெண்ணை ஒருமையில் பொன்முடி பேசிய காட்சி கண்டனத்திற்குள்ளாக்கியது. இது போன்ற பேச்சுக்களை எதிர்கட்சியினர் சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இந்தநிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசிய போது ஒரு பக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்; மத்தளத்திற்கு 2 பக்கமும் அடி என்பதை போல உள்ளது என் நிலைமை! இத்தகைய சூழலில், மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் சொல்வது? கன கேள்வி எழுப்பினார்.
வேதனைப்பட்ட ஸ்டாலின்
நாள்தோரும் காலையில், நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன்; சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என வேதனையோடு மு.க.ஸ்டாலின் கூறினார்.இந்த பேச்சும் வைரலாக பகிரப்பட்ட நிலையில், திமுகவின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில்,திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திராவிடர் கழக தலைவர் க தலைவர் வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பொன்முடி ஓசி என பேசியதற்கு மேடையில் வருத்தம் தெரிவித்தார். சகஜமாக பேசிய வார்த்தையை வைத்து கொண்டு அரசியல் செய்கிறார்கள். உண்மையில் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருந்தும் தெரிவிப்பதாக கூறினார்.
இந்தி திணிப்பை கண்டித்து அக்.15 அன்று ஆர்ப்பாட்டம்... அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின்!!
வருத்தம் தெரிவித்த பொன்முடி
பொதுக்கூட்டத்திலோ அல்லது வேறு எங்கையோ வாயா போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருக்கிறது என கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பார்த்து அப்படி பேசாதீர்கள் என சொல்லி விட்டதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பாஜக டார்கெட் செய்து தாக்கி கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் ஆட்சியில் வேறு எதை வைத்தும் அரசியல் செய்ய முடியாது என்பதால், ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு அரசியல் செய்வதாக குறிப்பிட்டதாக பொன்முடி பேசினார்.
இதையும் படியுங்கள்
தேவர் குருபூஜை.. பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர்.. பிரதமர் வருகை குறித்து பாஜக விளக்கம்..