இந்தி நடிகைகளை அழைத்துவர உதயநிதி புது டெக்னிக்.. இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை போட்டு பொளந்த அண்ணாமலை.
இந்தி எதிர்ப்பு எனும் திமுகவின் கபட நாடகத்தை கண்டித்து விரைவில் பாஜக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஹிந்தி எதிர்ப்பு எனும் திமுகவின் கபட நாடகத்தை கண்டித்து விரைவில் பாஜக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தி கட்டாயமாக்கப்படும் என எங்காவது மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆணையை முதலமைச்சரால் காட்ட முடியுமா? ஹிந்தி திணிக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரம் முதலமைச்சரிடம் உள்ளதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபடுவதாக கூறிய திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கோள்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவையும் தமிழக முதலமைச்சரையும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறிய விபரம் பின்வருமாறு:-
இதையும் படியுங்கள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?
எப்போதெல்லாம் மக்களுக்கு திமுக மீது கோபம் வருகிறதோ, அப்போதெல்லாம் திமுக கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் இந்தி எதிர்ப்பு போராட்டம்தான். 1966 முதல் 2022 வரை திமுக செய்த சாதனை என்ன? தமிழக அரசுப் பள்ளிகளில் கூட தமிழை கட்டாயமாக முடியவில்லை என்பதுதான். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் கூட தமிழை கட்டாய பாடமாக இல்லை, அங்கெல்லாம் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் அந்த திமுகதான் இப்போது இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் பாஜக இதுவரை எந்த இடத்திலும் இந்தியை திணிக்கவில்லை.
இதையும் படியுங்கள்: இந்தியிலும், தமிழிலும் மாறி மாறி வரவேற்பு பேனர்.. மேடையிலேயே காரசார விவாதம்..!
தமிழகம் இந்தியை பயன்படுத்தும் மாநிலங்களில் மூன்றாவது பட்டியலில் இருக்கிறது, எனவே தமிழகத்திற்கு இந்தி கட்டாயமாக கொண்டுவரப்படாது, இந்தி திணிப்பு என்ற பெயரில் திமுக நடத்திய போராட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. ஐஐஎம்- ஐஐடியில் ஹிந்தி கட்டாயமாக்கப்படும் என கோரிய மத்திய அரசின் அறிக்கை உண்மை என்றால், முதலமைச்சர் அதை காட்ட வேண்டும், பிரதமர் அலுவலகம் உட்பட எந்த இடத்தில் வேண்டுமானாலும் திமுக போராட்டம் நடத்தட்டும் ஆனால் அதில் உண்மை இருக்க வேண்டும்.
எனவே திமுகவின் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கண்டித்து பாஜக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும். அதில் திமுக நடத்தும் பள்ளிகள் குறித்த உண்மை வெளியில் கொண்டு வரப்படும், லால் சிங் சட்டா என்ற இந்தி படம் தமிழகத்தில் திரையிடப்பட்டது, அது இந்தி திணிப்பு இல்லையா? தமிழ் திரைப் படங்கள் அதனால் பாதிக்கபடவில்லையா, உதயநிதி தான் அந்த படத்தை தமிழகத்தில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியிட்டார்.
பிரதமரே தமிழகத்திற்கு வந்தால் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார். உதயநிதி தமிழகத்தில் இந்தி படத்தை விற்பதற்காக, இந்தி நடிகைகளை தமிழகத்திற்கு அழைத்து வருவதற்காகவும் புதிதாக தற்போது இந்தி மொழியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என கூறுகிறார். இவ்வாறு அண்ணாலை விமர்சித்தார்.