எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..Raid : தீபாவளி வசூல் வேட்டையில் அரசு அதிகாரிகள்.. சாட்டையை சுழற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை - ‘பரபர’ ரெய்டு !
வரும் 17ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த கூட்டத்தொடரில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை வரும் 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில் ,சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏ,க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை