அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை
திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை போர் அதிகரித்து வருகிறது.
அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது. அதில், ‘நாளைக்கு காலையில் எனக்கு ஒன்னும் இல்லைனா, எங்க ஊர்ல வேப்பமரத்துக்கு கீழ கட்டில் போட்டு தூங்குவேன். எனக்கு 20 வயசு ஆகுறவரைக்கும் எங்க வீட்டில் டாய்லெட் வசதியெல்லாம் கிடையாது. நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன்.
இதையும் படிங்க..Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?
நாளைக்கு காலையில் கூட தோட்டத்தில் வேலை பார்த்து பிழைச்சுக்குவேன். இப்போ இருக்குற அரசியல் தலைவர்களில் எத்தனை பேர் இதை பண்ண முடியும் ? நாளைக்கு காலையில் 300 ரூபாய் சம்பளத்துக்கு என்னால வேலைக்கு போக முடியும். இங்க எத்தனை பேர் தன்னோட லம்போகினி, ரேஞ்ச் ரோவர் கார் எல்லாத்தையும் விட்டுட்டு, என்ன மாதிரி வயக்காட்டில் செருப்பு போட்டுட்டு நடக்க முடியுமா ? அரசியலுக்கு வந்துட்டா எல்லாமே பவர் தான்.
இதையும் படிங்க..தீபாவளி வசூல் எதிரொலி.. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை !!
நீங்க என்ன வேணாலும் பேசிக்கோங்க, அட்டாக் பண்ணுங்க, மிரட்டுங்க. இதை பார்த்து பயப்படபோவதில்லை. துண்டை விரிச்சி போட்டு தைரியமா ரோட்டுல படுக்க முடியுமா என்று என் தாத்தா சொல்லுவார். கோவையில் எனக்கு வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பட்டினியாய் கிடந்த அண்ணாமலை, இன்று அதே கோவையில் விருந்தினராக வந்திருக்கிறேன்’ என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலை முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை.. மாஸ் காட்டிய பிரியங்கா காந்தி