அக்.20-ல் காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயல் உருவாக வாய்ப்பு..? வானிலை மையம் தகவல்

அக்.18 ஆம் தேதி  அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியானது, இரண்டு தினங்களுக்கு பின் அக்.20 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிக கனமழையும், கர்நாடகாவில் சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

A low pressure area will be form on Oct 20 - Today Weather Report

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில்,” தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி மற்றும்‌ கிருஷ்ணகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர்‌,திண்டுக்கல்‌, தேனி, மதுரை, விருதுநகர்‌, தென்காசி, இராமநாதபுரம்‌, சிவகங்கை, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌,திருவாரூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று தெரிவித்துள்ளது. மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகள்‌, தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌, இலங்கை கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில் வீசுவதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.85 லட்சம் கன அடியாக உயர்வு..

அக்.18 ஆம் தேதி  அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சியானது, இரண்டு தினங்களுக்கு பின் அக்.20 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிக கனமழையும், கர்நாடகாவில் சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் வரத்து 1.85 லட்சம் கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க:அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத வெள்ளம்.. 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம்.. வீடியோ காட்சி..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios