காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.85 லட்சம் கன அடியாக உயர்வு..
மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.85 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணை ஏற்கனவே முழுகொள்ளவை ஏட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. காவிரி ஆற்றில் வெள்ள கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடக அணைகளிலிருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர்வரத்து 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடியாக உள்ளது.
மேலும் படிக்க:பெரியகுளம் பண்ணை வீட்டில் முக்கிய ஆவணங்கள் கொள்ளையா..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்
ஏற்கனவே அணை முழுகொள்ளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. தற்போது நிலவரப்படி, அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 1.85 லட்சம் கன அடியாக உள்ளது. மேட்டூர் அனல்மின்நிலையம் வழியாக 21,500 கனஅடி உபரி நீரும் 16 கண் மதகு வழியாக 1 லட்சத்து 63 ஆயிரத்து 500 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க:குழந்தை திருமண விவகாரம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கைது! பரபரப்பு சம்பவம்!
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.