பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு
எடப்பாடி அணியை சேர்ந்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் எடப்பாடி அணி அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘ஒன்றிய அரசும், மாநில அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் இறையாண்மையை காப்பாற்ற முடியும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த அளவிற்கு அவர்கள் கீழே இறங்கி வரவில்லை.
இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்
மாநில கட்சிகள் ஆட்சியில் உள்ளதால், ஒன்றிய அரசு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் எனக்கூறி ஒன்றிய அமைச்சர்கள் தமிழகத்தில் ஆய்வு செய்கின்றனர். அது ஆரோக்கியமான செயல் அல்ல. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் மாறுபட்ட சிந்தனைகள் வரும்பொழுது அதிகாரிகளிடையே குழப்பங்கள், சங்கடங்கள் ஏற்படும்.
பாஜக அரசு தனது செயல்பாட்டை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக இதுபோல் செய்கிறது. தங்களது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இதுபோல் செய்து வருகின்றனர். அதற்காக இது போன்று துருப்புச் சீட்டை எடுத்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமாக இருக்காது. தமிழகத்தில் பாஜக காலூன்றி, ஆட்சிக்கு வர முயற்சி செய்கின்றனர்.
இதையும் படிங்க..குழந்தை திருமண விவகாரம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கைது! பரபரப்பு சம்பவம்!
தமிழகத்தில் கிராமங்கள் தோறும் இருக்கக்கூடிய கட்சி திமுக, அதிமுக. தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் எதிர்க்கட்சி அதிமுக என்பது எதார்த்தம், உண்மை. முதன் முதலில் சசிகலாவை எதிர்த்தவன் நான் தான். நான் அவருடன் பேசியதாக சொல்கிறார்கள். நான் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் திசை மாறிச் சென்று விட்டதாக கூறப்படுவது வருத்தமாக உள்ளது.
திமுக அரசு 16 மாத ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு மக்கள் மத்தியில் ஆட்சிக்கும் தனக்கும் கெட்ட பெயர் வருவதை உணர்ந்த முதலமைச்சர் அதனை திசை திருப்ப இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்’ என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க..கோவை தெற்கில் கமல்ஹாசனை தோற்கடித்து மாஸ் காட்டியவர் வானதி சீனிவாசன்.. பாஜக Vs மநீம மோதல் !