எடப்பாடி அருகே சீட்டில் அமர்வீர்களா.? எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நாளை காலை தொடங்க உள்ளது. இந்நிலையில் அது தொடர்பாக இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் :
இன்று அதிமுக அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் பற்றி மட்டுமே ஆலோசனை செய்யப்பட உள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் எல்லோரும் இன்று நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி உத்தரவு :
தமிழ்நாடு அரசுக்கு எதிராக என்ன மாதிரியான பிரச்சனைகளை கையில் எடுக்கலாம், எதை பற்றி பேச வேண்டும், எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என பலவற்றை இந்த கூட்டத்தில் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது. சென்னை செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதையும் படிங்க..குழந்தை திருமண விவகாரம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கைது! பரபரப்பு சம்பவம்!
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி :
அப்போது பேசிய அவர், ‘அரசு மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள், நிறைவேற்றப்பட வேண்டிய, நிறைவேற்றாத கோரிக்கைகள் பல்வேறு பிச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் குரல் எழுப்ப உள்ளோம்’ என்று கூறினார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்த எடப்பாடி பழனிசாமி கடிதம் குறித்த கேள்வி கேட்டனர்.\
அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், சட்டப்பேரவையை பொறுத்தவரை பேரவைத்தலைவர் முடிவு தான் இறுதியானது. அதற்கு கட்டுப்படுவோம். சட்டப்பேரவையில் எடப்பாடி ஒபிஎஸ் அருகருகே அமர போவது குறித்த கேள்விக்கு, எதிரெதிர் என நீங்கள் கூறுகிறீர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சியை எந்த நோக்கத்திற்காக வளர்த்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் செயல்பாடு நடவடிக்கை இருக்கும்.
தொண்டர்களின் அடிப்படை உரிமையை காக்கவே எம்ஜிஆர் சட்ட விதிகளை உருவாக்கி அதை பாதுகாத்தார். அதை தொண்டர்களிடம் இருந்து பறிபோகாமல் காப்பதே எங்கள் நோக்கம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க..இந்த வருட தீபாவளிக்கு 600 கோடி டார்கெட்.. டாஸ்மாக் மது விற்பனையை தட்டி தூக்குவார்களா மதுப்பிரியர்கள்!