ஓபிஎஸ் அணிக்கு செல்கிறாரா கே.பி.முனுசாமி? அதிர்ச்சியில் இபிஎஸ்.. ஒரே வார்த்தையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி..!
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஆனாதல், கடந்த முறை ஓபிஎஸ் அணியில் இருந்த கே.பி.முனுசாமி இந்த முறை எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துவிட்டார்.
எடப்பாடி அணியில் இருக்கும் கே.பி.முனுசாமி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து விலகி தர்மயுத்தத்தை நடத்திய போது அவருக்கு பக்கபலமாக உறுதியான இருந்தவர்களில் முக்கிய பங்காற்றியவர் கே.பி.முனுசாமி. தற்போது அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஆனாதல், கடந்த முறை ஓபிஎஸ் அணியில் இருந்த கே.பி.முனுசாமி இந்த முறை எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துவிட்டார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட 5 மாவட்ட நிர்வாகிகள்..! அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்
இதனால் எடப்பாடி பழனிசாமி அவருக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கியுள்ளார். ஆனால், அதே அணியில் இருக்கும் சி.வி.சண்முகத்துடன் அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினை பொதுக்குழு மேடையிலேயே வெடித்தது. இபிஎஸ் அண்மையில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அப்போது, அவரோடு எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகம் தான் சென்றார். கட்சியின் துணை பொதுச்செயலாளரான தன்னை அமித்ஷாவை சந்திக்க அழைத்து செல்லாமல் அமைப்பு செயலாளராக உள்ள சி.வி.சண்முகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தன்னை புறக்கணிப்பதாகவும் ஆதங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிருப்தியில் இருக்கும் அவர் சமீபத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தை கே.பி.முனுசாமி புறக்கணித்ததாக தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கே.பி.முனுசாமியை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளதாகவும், விரைவில் ஓபிஎஸ் அணிக்கு அவர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கே.பி.முனுசாமி கூறுகையில்;- வைரஸ் காய்ச்சல் காரணமாகவே வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். தன்னைப்பற்றி தவறாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. எப்போதும் அணி மாறிக் கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை. ஓ.பி.எஸ். அணிக்குச் செல்ல மாட்டேன் என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க;- துரைமுருகனின் துச்சாதனன் புத்தி இன்னும் மாறவில்லை.. தெலுங்கு பட வில்லன் போல பேசும் பொன்முடி.. TTV விளாசல்.!