துரைமுருகனின் துச்சாதனன் புத்தி இன்னும் மாறவில்லை.. தெலுங்கு பட வில்லன் போல பேசும் பொன்முடி.. TTV விளாசல்.!

நாங்கள் திருந்தவே இல்லை என பிரகடனம் செய்யும் விதமாக திமுக ஆட்சி தற்போது நடக்கிறது. நிதி நிலை மோசமாக இருந்தபோதும் மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதியை கொடுத்தனர் திமுகவினர். பொதுக்குழுவில் தூக்கம் வராமல் தவிப்பதாக கூறினார் ஸ்டாலின்.  ஜெயலலிதா இருந்தால் அமைச்சர்களுக்கு தூக்கம் வருமா..? பொழுது விடிந்தால் அமைச்சர் பதவி இருக்குமா என தெரியாது. 

Minister Ponmudi who talks like a Telugu movie villain.. TTV Dhinakaran criticize

முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களால் எனக்கு தூக்கமில்லை என்கிறார். ஜெயலலிதாவால் அமைச்சர்கள் தூக்கமில்லாமல் இருந்ததார்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

அரசுத்துறைகள் தோறும் மலிந்து வரும் முறைகேடுகள், மக்களைப் பாதிக்கும் மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடி பேச்சு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, பேசிய டிடிவி.தினகரன்;- தமிழை பயன்படுத்தி தமிழக மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர். தற்போது புதிதாக மதத்தை கையில் எடுத்துள்ளனர். அனைத்து மதத்தையும் ஒன்றாக பார்க்கும் மக்கள் வாழும் நாடு தமிழ்நாடு. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்கள் வாக்களிப்பதில்லை, நல்லாட்சி வேண்டும் என்றுதான் வாக்களிப்பர். 

இதையும் படிங்க;- பணியில் மெத்தனம்? தூக்கி அடிச்சிருவோம் பாத்துக்கோங்க - அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்

Minister Ponmudi who talks like a Telugu movie villain.. TTV Dhinakaran criticize

ராஜாஜி, காமராசர், அண்ணா எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக மக்களை எஜமானார்களாக கருதி நடந்த ஆட்சி. எம்ஜிஆர் தயவால் ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி. ஆனால்.  எம்ஜிஆருக்கே துரோகம் செய்து கட்சியை விட்டு நீக்கினார். எம்ஜிஆர் மறைவின் பிறகு தொண்டர்கள் குழப்பத்தில் இருந்ததால் விபத்தாக திமுக ஆட்சி அமைந்தது. 2016க்கு பிறகு துரதிருஷ்டவசமாக 4 ஆண்டுகள் அண்ணன் பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்தது. எடப்பாடி பழனிச்சாமியின் தவறான நிர்வாகம், முறைகேடு, ஊழல், திருவிளையாடல்களால் மக்கள் கோபம் கொண்டு திமுகவை தேர்ந்தெடுத்தனர். 

Minister Ponmudi who talks like a Telugu movie villain.. TTV Dhinakaran criticize

நாங்கள் திருந்தவே இல்லை என பிரகடனம் செய்யும் விதமாக திமுக ஆட்சி தற்போது நடக்கிறது. நிதி நிலை மோசமாக இருந்தபோதும் மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதியை கொடுத்தனர் திமுகவினர். பொதுக்குழுவில் தூக்கம் வராமல் தவிப்பதாக கூறினார் ஸ்டாலின்.  ஜெயலலிதா இருந்தால் அமைச்சர்களுக்கு தூக்கம் வருமா..? பொழுது விடிந்தால் அமைச்சர் பதவி இருக்குமா என தெரியாது. தவறு செய்தால் அமைச்சர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார். தலைமை ஆசிரியர் , ஆசிரியர்களை போல கண்டிப்புடனும், மக்களிடம் கனிவாகவும் இருந்தார் ஜெயலலிதா. 

இதையும் படிங்க;-  நீ எல்லாம் மூத்த அமைச்சரா.. உன் அப்பன் வீட்டு பணமா.?? ஓசி என பேசிய பொன்முடியை ஓங்கி அடித்த நாராயணன் திருப்பதி

Minister Ponmudi who talks like a Telugu movie villain.. TTV Dhinakaran criticize

பழனிசாமி செய்துள்ள கோல்மாலால் அதிமுக பொதுச்செயலாளர்  பதவிக்கு இன்று தொண்டர்களால் போட்டியிட முடியாத சூழல். ஜெயலலிதா இருந்தவரை நீட் இல்லை, விவசாயிகளை பாதிக்கும் திட்டங்கள் இல்லை. ஜெ. இயற்கையான தலைவர், வாரிசு தலைவரோ, உருவாகப்பட்ட தலைவரோ அல்ல. ஜெ. தனக்கு பிறகு யாரையும் கட்சி தலைமைக்கு ஏற்பாடு செய்யவில்லை.  தலைவர் பதவி வாரிசு பதவியில்லை என ஜெயலலிதா தொடர்ந்து கூறி வந்தார். யார் தலைவராக வர வேண்டும் என தொண்டர்களே தீர்மானிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கூறியிருந்தார்.

செந்தில் பாலாஜியால் தான் இன்று திமுகவில் பிரச்சினையே ஏற்பட்டுள்ளது. துரைமுருகன் படித்தவர் , 80 வயதை கடந்தவர் அவரது பேச்சு ஜமீன்தார் போல இருக்கிறது , பொதுவெளியில் ஒரு மருத்துவரிடம் எப்படி நடந்து கொண்டார். கன்னியாகுமரிக்கு தூக்கி அடிப்பேன் என்கிறார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுகவினரை எங்கு தூக்கி அடிப்பது. துரைமுருகனின் துச்சாதனன் புத்தி இன்னும் மாறவில்லையே.. மாறாதையா மாறாது.. மனமும் குணமும் மாறாது என்ற பாடல்போலதான். 

Minister Ponmudi who talks like a Telugu movie villain.. TTV Dhinakaran criticize

அமைச்சர் பொன்முடி தெலுங்கு பட வில்லன் போல பேசுகிறார்; இவர் போகும் கார், வீடு எல்லாம் ஓசி. ஆனால் அகங்காரம், ஆணவத்தால் எஜமானர்களாகிய மக்களை ஓசி என கூறுகிறார். பல கட்சி மாறும் ராஜகண்ணப்பன் அதிகாரியை சாதியை சொல்லியுள்ளார். கனிமொழி துணைப்பொதுச் செயலாளராகி உள்ளார்.  கட்சியில் வேறு யாருமே இல்லையா.. திமுக வாரிசு அரசியலால் மடம் போல இருக்கிறது. திமுகவில் பயத்தால்தான் கனிமொழிக்கு பதவி கொடுத்துள்ளார்கள். 

சர்வாதிகாரியாக மாறுவேன் என கூறி ஜெ.வை காப்பி அடிக்க பார்க்கிறார் ஸ்டாலின். பாஜகவை தமிழகத்தில் வளர்ப்பது ஸ்டாலினும் , திருமாவளவனும் தான். பாஜக மீது திமுக பயத்தில் இருக்கிறது. கழிவறை கூட முறையாக கட்டாத திராவிட மாடலால் திராவிடர்களாக இருக்க வெட்கமாக இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்து கொள்வோம்.  திமுகபோல தொடை நடுங்கி கிடையாது நாங்கள். பொய் பித்தலாட்ட திமுக ஆட்சியின் ஆயுள்காலம் முடிவதற்கான அறிகுறி தென்பட்டுவிட்டது. முதல்வர் புலம்பியது அதைத்தான் காட்டுகிறது. அமைச்சர்கள் நிதானமிழந்து இருக்கின்றனர்.  மீண்டும் ஜெ. ஆட்சி அமைய உழைக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  இறுமாப்போடு பேசும் திமுக அமைச்சர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.. இபிஎஸ் ஆவேசம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios