கோவை தெற்கில் கமல்ஹாசனை தோற்கடித்து மாஸ் காட்டியவர் வானதி சீனிவாசன்.. பாஜக Vs மநீம மோதல் !

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எழுதிய தடையொன்றுமில்லை எனும் புத்தக வெளியீட்டு விழா இன்று கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

Vanathi Srinivasan defeating Kamal Haasan in Coimbatore continues bjp vs mnm fight

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பாஜக மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன்,எச்.ராஜா,பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டனர்.

எச்.ராஜா :

இதில் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ‘பெண்ணுரிமை பற்றி மற்ற கட்சிகள் பேசுவார்கள். 3 சதவீதம் பெண்களுக்கான உரிமை பாஜகவில் மட்டுமே உள்ளது. பட்டியல் சமூகத்திற்காக மூன்று சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் தேசிய கட்சி மாற்று கட்சியாக வருவதற்கும் மாற்று கருத்து இல்லை என்பதையே இப்புத்தகம் காட்டுகிறது என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ பாஜக மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.தடையொன்றுமில்லை என்ற வார்த்தையை தனது வாழ்க்கையில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் உண்டு என்ற அடிப்படையில் எழுதியுள்ளார் வானதி. இன்றைய இளைஞர்களுக்கு படிக்கின்ற பழக்கம்  குறைந்து வருகிறது. கல்கண்டு புத்தகம் பார்த்து கருத்து சொன்னவர்கள் இன்று மீம்சை பார்த்து விமர்சனம் கூறும் காலம் வந்து விட்டது’ என்று கூறினார்.

Vanathi Srinivasan defeating Kamal Haasan in Coimbatore continues bjp vs mnm fight

இதையும் படிங்க..குழந்தை திருமண விவகாரம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கைது! பரபரப்பு சம்பவம்!

பொன்.ராதாகிருஷ்ணன் :

அடுத்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புத்தகத்தின் தலைப்பு தடையொன்றுமில்லை. ஆனால் நான் அறிந்த வரை முழுக்க முழுக்க தடைகளை கடந்து வந்தவர் வானதி. தடை ஓட்டத்தில் ஓடுபவர் போல் எத்தனையோ சவால்களை அவர் சந்தித்துள்ளார். வானதியின்  பிடிவாத குணமே அவரை தாழ்த்தாமல் உயர்த்தும். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் பிடிவாதக்காரர் தான்.

ஒரு தேர்தலில் தான் தோல்வியுற்றாலும் பின்னர் அதே தொகுதியில் வெற்றி பெற்றவர். ஆண்களை விட நான் உயர்ந்தவர் என்ற குணம் படைத்தவர்கள் எனவும் ஆண்களுக்கு பாதுகாப்பாக துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்கள் என்றும் கூறியதுடன் கமல்ஹாசனை வானதி சீனிவாசன் தொகுதியில் தோற்கடித்தார் என்றால், ஸ்மிருதி இராணி தொலைக்காட்சி விவாதத்தில் கதறவிட்டார் என்று பேசினார்.

அமைச்சர் ஸ்மிருதி இராணி : 

பிறகு சிறப்புரையாற்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘இந்த புத்தகத்தில் வானதி ஒரு கிராமத்தில் குழந்தையாக வளர்ந்தபோது எதிர்கொண்ட போராட்டங்கள் மற்றும் தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தியதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் தாங்கள் கல்வி கற்கும் போது எந்த தொழிலை மேற்கொள்ள வேண்டும் அல்லது இல்லத்தரசிகளாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மகளாக, மனைவியாக, தாயாக மதிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்

Vanathi Srinivasan defeating Kamal Haasan in Coimbatore continues bjp vs mnm fight

வானதி சீனிவாசன் :

அடுத்து பேசிய வானதி சீனிவாசன், ‘அரசியலில் சாதிக்க தனது பெற்றோரும் , கணவரும் , மகன்களும் முக்கிய காரணம் எனவும், என்னை நல்வழி படுத்திய முக்கிய தலைவர்கள் மேடையில் அமர்ந்துள்ளார்கள். இது சுயசரிதை கிடையாது. என்னுடைய அனுபவங்களை புத்தகங்களில் வெளியிட்டுள்ளேன். வீட்டில் உள்ள பெண்களும் அரசியலில் சாதிக்க முடியும் என்றால் நாம் அதற்கான நேரத்தை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.

பாஜக பல்வேறு வாய்ப்புகளும், பொறுப்புகளும் தனக்கு கொடுத்துள்ளதாகவும் பதவி, பொறுப்பு என்பதை தலைக்கு ஏற்றாமல் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடிதான் இதற்கு உதாரணம் என்றும் கூறினார். பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைய ஊக்குவிப்பதற்காகவே இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்’ என்று கூறினார்.

இதையும் படிங்க..இந்த வருட தீபாவளிக்கு 600 கோடி டார்கெட்.. டாஸ்மாக் மது விற்பனையை தட்டி தூக்குவார்களா மதுப்பிரியர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios