தீவிர ரசிகனாக இருந்தும் CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத் - காரணம் தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க..!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தீம் மியூசிக் போட்டுக் கொடுக்க மறுத்த காரணத்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஐபிஎல் என்றால் அனைவருக்கு முதலில் நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அந்த அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள அந்த அணி. CSK-விற்கு இந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருப்பதற்கு காரணம் அந்த அணி செய்த சாதனைகளை, அதனை தோனி வழிநடத்திய விதமும் தான். இப்படி புகழ்பெற்ற அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத்தும் CSK அணியின் வெறித்தனமான ரசிகர் ஆவார். CSK அணியின் தீவிர ரசிகராக இருந்தும் அவர் அந்த அணிக்காக எந்த ஒரு பாடலும், தீம் மியூசிக்கும் போட்டுக்கொடுத்தது இல்லை. அதற்கான காரணம் குறித்து அனிருத் ஒரு பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார்.
அதன்படி, ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது அனிருத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகவில்லை. ஆனால் அந்த சமயத்தில் CSK அணிக்காக சுயாதீன இசைக்கலைஞர்கள் இசையமைத்த ‘விசில் போடு’ என்கிற தீம் பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி, பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது.
பின்னர் CSK அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு 2018-ல் மீண்டும் கம்பேக் கொடுத்து கெத்தாக கோப்பையையும் தட்டித்தூக்கி சாம்பியன் ஆனது. அந்த சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அனிருத்தை சந்தித்து, CSK-விற்காக தீம் மியூசிக் போட்டுக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... சம்பளமே வாங்காமல் அனிருத் இப்படி ஒரு வேலையை செய்கிறாரா..! ஆச்சர்யம் ஆனால் உண்மை
ஆனால் அனிருத் அவர்களிடம் முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். என்னடா இது... CSK-வின் தீவிர ரசிகனாக இருந்தும் அவர் இப்படி சொல்லிட்டாரே என நிர்வாகிகள் ஷாக் ஆகிப்போய், அவர் இசையமைக்க மறுப்பதற்கான காரணத்தை அனிருத்திடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சொன்ன காரணத்தை கேட்டு அவர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.
ஏனெனில், முன்னதாக CSK-விற்காக சுயாதீன இசைக் கலைஞர்கள் இசையமைத்து விசில் போடு பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த பாடல் உருவாக்கிய ஒரு மேஜிக்கை என்னால் மீண்டும் கொண்டுவர முடியாது. நான் CSK மேட்ச் பார்க்கும்போதே தல தோனி சிக்சர் அடிக்கும்போதெல்லாம் விசில் போடு பாடலை போடுவார்கள், அப்போது எனக்கே புல்லரிக்கும்.
நான் என்ன ஒரு பாடலோ, தீம் மியூசிக்கோ போட்டாலும் என்னால் அதனை நிச்சயம் பீட் பண்ணவே முடியாது. ஏனென்றால் அது ஏற்படுத்திய தாக்கம் வேறலெவல். எப்படி சூப்பர்ஸ்டார் மியூசிக் என்றால் அண்ணாமலை படத்தின் ஓப்பனிங் இசை ஞயாபகத்து வருகிறதோ, அதேபோல் CSK என்று சொன்னால் விசில் போடு தான். இதனால் தான் நான் தீம் மியூசிக் போடவில்லை என கூறியுள்ளார்.
இவ்வளவு பெரிய இசையமைப்பாளராக இருந்தும் சுயாதீன இசைக்கலைஞர்களுக்கும், அவர்களின் பாடலுக்கும் மதிப்பு கொடுத்து அனிருத் செய்த இந்த செயலுக்கும் ஒரு விசில் போடலாம். ஹாப்பி பர்த்டே அனிருத்.
இதையும் படியுங்கள்... கன்னடத்தை தொடர்ந்து தமிழிலும் மாஸ் காட்டும் காந்தாரா... இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய கார்த்தி