காசிமேடு மீன் சந்தையில் அலைமோதிய கூட்டம்.. நாளையுடன் புரட்டாசி முடிவடைவதால் கூட்டம்..
புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளும் முடிவடைந்து விட்டதாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
புரட்டாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதிலும் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் வந்ததால் மீன்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.
சென்னை காசிமேட்டில் நள்ளிரவு முதலே மீன்களை வாங்க மக்கள் அர்வத்துடன் வந்தனர். பொதுவாக நள்ளிரவு இரண்டு மணியளவிலே தொடங்கும் விற்பனையில் பெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள் மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.
மேலும் படிக்க:போடிமெட்டு சாலையில் திடீரென ஏற்பட்ட நீர் வீழ்ச்சி..! வெள்ளப்பெருக்கால் போக்குவரத்திற்கு தடை
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் பலரும் மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவத்தை சாப்பிடுவதில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக மீன் விற்பனை மந்த நிலையில் இருந்தது. மேலும் மீன்களின் விலையானது வழகத்தை விட குறைவாக காணப்பட்டது.
இந்நிலையில் நாளையுடன் புரட்டாசி மாதம் முடிவதால், புரட்டாசியின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று மீன் சந்தையில் மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மேலும் புரட்டாசி அனைத்து சனிக்கிழமைகளும் முடிவடைந்து விட்டதால், மீன்களை வாங்க மக்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
மேலும் படிக்க:காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.85 லட்சம் கன அடியாக உயர்வு..
இதனால் மீன்களின் விலை சராசரியை விட ரூ.100 முதல் ரூ.150 வரை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் சற்றே விலை ஏறியிருப்பதாக வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.