இந்தி திணிப்பை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது - முன்னாள் முதலமைச்சர் திட்ட வட்டம்

இந்தி திணிப்பை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது என்றும், புதுச்சேரில் நடைபெறும் ஆட்சியை மக்களை விரைவில் தூக்கி எறிவார்கள் என்றும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 

Ex CM Narayanasamy Press meet

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக சொல்கின்றனர். ஆனால் இந்திய நாட்டின் பொருளதாரம் 6.5 சதவீதமாக  உள்ளது என உலக வங்கி கணித்துள்ளது.

உலக பட்டினிக் குறியீட்டில் 121 நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது. நமது நாட்டில் பட்டினியால் வாடும் மக்கள் 22 கோடி பேரும், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் 33% உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்தி திணிப்பை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. இந்தி திணிப்பை நாங்கள் போராடி தடுப்போம். புதுச்சேரியில் பொதுமக்கள் மரியாதை நிமிர்த்தமாக ஆளுநரை சந்திக்கலாம். ஆனால் மக்களிடம் குறைகேட்க சந்திப்பது தவறு.

மேலும் படிக்க:இந்தியாவில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள்... நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

தெலுங்கானாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை மாநில மக்களிடம் குறை கேட்டதாக எந்த ஆதாரமும் அவர் அனுப்பிய புத்தகத்தில் இல்லை. ஆனால் புதுச்சேரியில் மட்டும் தன்னிச்சையாக பொதுமக்களிடம் குறை கேட்க காரணம் என்ன?நீதிமன்ற மேல்முறையீட்டில் துணைநிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் இல்லை. அமைச்சரவை எடுக்கும் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். எனவே குறைகேட்பு கூட்டம் நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.

புதுச்சேரி அரசு மின்துறையை தனியார்மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதுக்குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்க வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமி தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை அழைத்து பேச வேண்டும். 

மேலும் படிக்க:இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை! டாலர் மதிப்பு தான் உயர்ந்திருக்கிறது! நிர்மலா சீதாராமன் சொன்ன புது விளக்கம்

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் புதுச்சேரியில் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே மக்களை பற்றி கவலைப்படாத இந்த அரசை மக்கள் வெகு விரைவில் தூக்கி எறிவார்கள் என்று அவர் பேசினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios