மாணவி சத்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அன்றே கோட்டைவிட்ட காவல்துறை - பரபர பின்னணி!
சத்யா கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளனர் சிபிசிஐடி.
மாணவி கொலை :
கல்லூரி மாணவி கொலை வழக்கில் அக்டோபர் 14 ஆம் தேதி சதீஷ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து, கொலையாளி சதீஷை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கொலையாளி சதீஷ் தொடர்பான முந்தைய வழக்கு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பழைய வழக்குகள் :
மே மாதம் 23 ஆம் தேதி, கல்லூரி வாயிலில், கல்லூரி மாணவியை தாக்கியது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. மாணவியை கல்லூரிக்கு வெளியில் வைத்து தாக்கிய வழக்கில் சதீஷ் மீது வாய்தகராறு செய்ததாக சென்னை மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்த தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பு வாக்குமூலம் :
சத்யாவை கொன்ற சதீஷின் வாக்குமூலமும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படிக்கும்போது, சத்யா மீது காதல் ஏற்பட்டது. அவரை பின்தொடர்ந்து வந்தேன். ஒருநாள் அவரிடம் செல்போன் எண்ணை கேட்டேன். அவர் தரவில்லை. இதனால், அவரது தோழிகள் மூலம் சத்யாவின் செல்போன் எண்ணை வாங்கி அவரிடம் காதலை சொன்னேன். ஆனால், அவர் எதுவும் கூறவில்லை.
இதையும் படிங்க..கோவை தெற்கில் கமல்ஹாசனை தோற்கடித்து மாஸ் காட்டியவர் வானதி சீனிவாசன்.. பாஜக Vs மநீம மோதல் !
இந்த நிலையில், தியாகராய நகரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார் சத்யா. அதுமுதல், வீட்டில் இருந்து தனியாக பரங்கிமலை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்தார். இதனால், நானும் பரங்கிமலை ரயில் நிலையம் வந்து அவரிடம் பேசுவேன். படிப்பு, குடும்பம் குறித்து நான் அக்கறையோடு பேசியதால், சத்யாவுக்கு என் மீது நம்பிக்கை ஏற்பட்டது. நாளடைவில், என் காதலை ஏற்றுக்கொண்டார்.
காதலை முறித்த சத்யா :
நாங்கள் ஒன்றாக செல்வது குறித்து சத்யாவின் தாய்க்கு தெரிந்து, சத்யாவை கண்டித்துள்ளார். அதன் பிறகும் எங்கள் பழக்கம் தொடர்ந்ததால், இனிமேல் நீ கல்லூரிக்கு செல்ல வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளார். என் தரப்பு விளக்கத்தை கூறுவதற்காக செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். ஆனால்,செல்போன் அழைப்பை அவர் ஏற்கவில்லை.
நான் சத்யாவை சந்திக்க கூடாது என்பதற்காக, சத்யாவை அவரது பெற்றோரே தினமும் வீட்டில் இருந்து ரயில் நிலையத்தில் விடுவதும், கல்லூரி முடிந்த பிறகு ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்வதுமாக இருந்தனர். இதைத் தொடர்ந்து, சத்யாவை பின்தொடர்ந்து வந்து நான் தொந்தரவு செய்வதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இப்படி 2 முறை புகார் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க..இந்தி பயிற்று மொழியா.? அமித்ஷா பதவி விலக வேண்டும்.. எச்சரித்த திருமாவளவன்
கொலைக்கான காரணம் :
அதன்பிறகும்கூட, சத்யாவை மறக்கமுடியவில்லை. தோழிகள் மூலம் சத்யாவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். இனிமேல் சந்திக்க வேண்டாம் என்று கூறினார். சத்யாவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தது தெரியவந்தது.
இன்ஜினீயர் மாப்பிள்ளைக்கு சத்யாவை திருமணம் செய்து வைக்க பேசி முடித்துள்ளதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கேள்விப்பட்டேன். ஆண்டுக்கணக்கில் பழகியும், காதலை ஏற்க மறுக்கிறாரே என்ற கோபம் வந்தது. ‘எனக்கு கிடைக்காத சத்யா வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழக்கூடாது’ என்ற எண்ணம் எழுந்ததால் அவளை கொன்றேன் என்று கூறியுள்ளார்.
சிபிசிஐடி போலீசார் விசாரணை :
டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் நேற்று பிற்பகல் தங்களது விசாரணையை தொடங்கினர். முதல் கட்டமாக மாணவி கொலை செய்யப்பட்ட பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும் அவர்களது ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க..பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு