இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

08:35 PM (IST) Oct 18
Rishab Shetty Blessings at Varanasi : காந்தாரா: சாப்டர் 1' படத்தின் வெற்றியில் திளைத்து வரும் நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி, வெள்ளிக்கிழமை வாரணாசிக்குச் சென்று அங்கு நடைபெற்ற கங்கா ஆரத்தியில் கலந்துகொண்டார்
12:00 AM (IST) Oct 18
கைவா, தில் பசந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை மேகா ஷெட்டி, பதிவிட்டுள்ள கிஸ் எமோஜி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.
11:51 PM (IST) Oct 17
என்.டி.ஆர் மற்றும் சிரஞ்சீவி 'திருகுலேனி மனிஷி' படத்தில் இணைந்து நடித்தனர். மற்றொரு படத்திலும் இருவரும் நடிக்கவிருந்தனர். ஆனால், அந்தப் படத்திலிருந்து சிரஞ்சீவி அவமானகரமாக நீக்கப்பட்டார்.
11:36 PM (IST) Oct 17
Kantara Chapter 1: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா அத்தியாயம் 1' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2'-ஐ விட அதிக லாப சதவீதத்தை ஈட்டியுள்ளது.
11:28 PM (IST) Oct 17
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனி ஆணையம், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சித்த அமைச்சர், தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் உள்ளன.
10:47 PM (IST) Oct 17
தவெகவை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றம், ஆந்திராவில் கூகுள் பிரம்மாண்ட AI டேட்டா சென்டர், கர்நாடகாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு உள்ளிட்டவை இந்த வாரத்தின் TOP 10 செய்திகள் தொகுப்பில் உள்ளன.
10:35 PM (IST) Oct 17
இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மெகா சாதனையை எட்ட உள்ளார். அது என்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
10:35 PM (IST) Oct 17
சிபிஐ வழக்கை கையில் எடுக்கவிருக்கையில் இவர்கள் ஏன் ஓடோடி சென்று யாராக் காப்பாற்ற முனைகிறார்கள். பெருந்துயரம் நடந்தபோது, சம்பவ இடத்தில் இருந்தவர்களும், தமது உறவுகளை இழந்தவர்களும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ளனர்.
10:32 PM (IST) Oct 17
10:14 PM (IST) Oct 17
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம், நமது பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இனியாவது மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா?
09:47 PM (IST) Oct 17
தீபாவளி மறுநாள் பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
09:07 PM (IST) Oct 17
தமிழகத்தில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினர் மீதான வன்முறை 68% அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ஆணவக்கொலை தொடர்பாக புதிய ஆணையம் அமைத்திருப்பது கண்துடைப்பு என்றும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
09:02 PM (IST) Oct 17
கரூர் ஆவணங்கள் தீயில் எரிந்த புகைப்படங்கள் வெளியாயின. இதை வைத்து திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
08:50 PM (IST) Oct 17
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருநெல்வேலியில் தனது பெயரில் தொடங்கப்பட்ட நற்பணி மன்றம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்துவதைக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
08:49 PM (IST) Oct 17
தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று கூறியுள்ளார்.
08:36 PM (IST) Oct 17
Karthik Raj Won Favourite Actor award for ZTKV 2025 : ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நாயகன் கார்த்திக் ராஜ் தொடர்ந்து 6ஆவது முறையாக ஃபேவரைட் நடிகருக்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகளில் விருது வென்றுள்ளார்.
08:26 PM (IST) Oct 17
இந்திய ரயில்வேயின் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 16 பெட்டிகளுடன், கவாச் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடன் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் சேவை விரைவில் தொடங்கும்.
07:27 PM (IST) Oct 17
தெருக்கள் மற்றும் ஊர்ப்பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து, அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
07:25 PM (IST) Oct 17
Meena and Senthil Fight for Money : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மற்றும் செந்தில் இருவரும் சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
07:24 PM (IST) Oct 17
வழக்கறிஞர் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறை இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.
06:30 PM (IST) Oct 17
நடிகை மீரா மிதுன் மன நல காப்பகத்திலிருந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
06:15 PM (IST) Oct 17
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, மோடி-நிதிஷ் குமார் ஆட்சியின் வளர்ச்சிப் பணிகளை எடுத்துரைத்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
06:02 PM (IST) Oct 17
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி உள்ளிட்ட அனைத்து நிதிகளையும் தர மறுப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
05:49 PM (IST) Oct 17
தீபாவளியை முன்னிட்டு ஜெய்ப்பூரில் 'ஸ்வர்ண பிரசாதம்' என்ற தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட இனிப்பு கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. 'தியோஹார்' என்ற நிறுவனத்தால் தங்க சாம்பலைப் பயன்படுத்தி இந்த இனிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
05:41 PM (IST) Oct 17
Today Rasi Palan : அக்டோபர் 18, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:25 PM (IST) Oct 17
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, கணவரின் குடிப்பழக்கம் மற்றும் தொந்தரவு காரணமாக மனமுடைந்த கௌரி என்ற பெண் தனது இரண்டு மகன்களுடன் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டனர்.
05:22 PM (IST) Oct 17
Today Rasi Palan : அக்டோபர் 18, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:09 PM (IST) Oct 17
ராகுல் இப்படிப் புரிந்துகொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இந்தியாவின் பிரதமராக இருப்பதற்கான புத்திசாலித்தனம் அவரிடம் இல்லை. நீங்கள் மட்டுமே பார்வையாளர்களாக இருக்கும் ஐ ஹேட் இந்தியா சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பி வருவது நல்லது
05:06 PM (IST) Oct 17
Today Rasi Palan : அக்டோபர் 18, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:56 PM (IST) Oct 17
கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் எப்படி நவீனை காப்பாற்றுகிறார் என்பது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
04:42 PM (IST) Oct 17
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக முதலீடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் தொழில் துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் சிறுபிள்ளைத்தனம் போல் பதில் சொல்வதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
04:41 PM (IST) Oct 17
Today Rasi Palan : அக்டோபர் 18, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:22 PM (IST) Oct 17
Today Rasi Palan : அக்டோபர் 18, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:21 PM (IST) Oct 17
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மூதாட்டி மற்றும் அவரது பேத்திகள் வீட்டில் தனியாக இருந்தபோது, ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.
04:21 PM (IST) Oct 17
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், தாலிபன்கள் கைப்பற்றிய பாகிஸ்தான் ராணுவ பேன்ட்களைக் காட்டி கேலி செய்யும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
04:09 PM (IST) Oct 17
Today Rasi Palan: அக்டோபர் 18, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:49 PM (IST) Oct 17
2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு போட்டிபோட்டு ரிலீஸ் ஆகி இருக்கும், டியூட், பைசன் மற்றும் டீசல் ஆகிய படங்களில் எந்த படம் மக்கள் மனதை வென்றிருக்கிறது என்பதை பார்க்கலாம்.
03:41 PM (IST) Oct 17
கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த டாப் 5 சிறந்த படங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு நடிகை எடுத்த தவறான முடிவு, கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
03:38 PM (IST) Oct 17
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
03:34 PM (IST) Oct 17
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் திமுக அரசை செல்லூர் ராஜு கடுமையாக சாடியுள்ளார். அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே மேயர் ராஜினாமா செய்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் தவெக கொடியுடன் இளைஞர்கள் பங்கேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.