- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பணத்துக்காக சண்டை போட்டுக் கொண்ட மீனா மற்றும் செந்தில் – ரூ.10 லட்சம் என்னதான் ஆச்சு?
பணத்துக்காக சண்டை போட்டுக் கொண்ட மீனா மற்றும் செந்தில் – ரூ.10 லட்சம் என்னதான் ஆச்சு?
Meena and Senthil Fight for Money : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மற்றும் செந்தில் இருவரும் சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் பட்டியலில் இருப்பது பாண்டியன் மற்றும் கோமதிக்கு பிறகு மீனா மற்றும் செந்தில் மட்டுமே. நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நீண்ட விமர்சனங்கள், சண்டை சச்சரவுகளுக்கு பிறகு குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தனர். மீனா வீட்டிலேயும் இதே நிலை தான்.
மீனா வீட்டிற்கு ஒரே மகள்
மீனா வீட்டிற்கு ஒரே மகள் என்பதால், கொஞ்சம் செல்லமும் கூட. அக்கா, தம்பி, தங்கை, அண்ணன் என்று யாருமே இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார். ஆனால், செந்திலுக்கு அப்படியில்லை. அவர் தங்கை, தம்பி, அண்ணன், அக்கா என்று ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்ந்து வந்தார்.
செந்தில் அரசு வேலை
இதன் காரணமாகத்தான் மீனா செந்திலை காதலித்து பெற்றோரையும் மீறி அவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது தனது அப்பா, அம்மா மீது வைத்திருக்கும் பாசத்தை விட மாமனார் மற்றும் மாமியார் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் செந்திலின் பிடிவாதத்தால் இப்போது தனியாக சென்றுள்ளார். செந்தில் அரசு வேலை பார்ப்பதாலும், அப்பா கொடுத்த டார்ச்சராலும் அவர் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து இப்போது தனிக்குடித்தனமும் சென்றனர்.
தனிக்குடித்தனம்
மீனாவிற்கு எப்படி பாண்டியன், கோமதியோ அதே போன்று செந்திலுக்கு மீனாவின் அப்பாவும், அம்மாவும் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் செந்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதாக தனது குடும்பத்தையும் மீறி தனிக்குடித்தனம் சென்றார். ஆனால், மீனாவிற்கு இதில் துளி கூட விரும்பமில்லை.
நவீனை காப்பாற்றிய கார்த்திக்; சிக்கினான் சிவனாண்டி; கார்த்திகை தீபம் அப்டேட்!
ரூ.10 லட்சம்
வேறு வழியில்லாமல் தனியாக வசித்து வரும் நிலையும் கூட. இந்த நிலையில் தான் மீனாவிற்கு அவரது ஆபிசில் வாங்கிய லோனை திரும்ப அடைக்க பாண்டியன் ரூ.10 லட்சம் கொடுத்தார். ஆனால், அந்தப் பணத்தை மீனா ஆபிஸில் கட்டவில்லை. செந்தில் தான் கட்டிக் கொள்வேன் என்று மீனாவிற்கு தெரியாமல் எடுத்து செலவு செய்ய ஆரம்பித்துவிட்டார். அப்படி எடுத்த பணத்தில் தான் வீட்டிற்கு தேவையான ஃபர்னிச்சர். டைனிங் டேபிள், டிவி என்று எல்லாமே வாங்கிப் போட்டுள்ளார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் டைனிங் டேபிளின் விலை மட்டும் ரூ.42000. இதைக் கேட்டு மீனா சண்டை போட்டுள்ளார்.
டிவி, ஃபர்னிச்சர், சோபா செட், டைனிங் டேபிள்
டிவி, ஃபர்னிச்சர், சோபா செட், டைனிங் டேபிள் என்று எல்லாமே ஆர்டர் போடுவதற்கு முன் மீனாவிற்கு காசு பற்றி தெரியாது. கடைசியில் இதெல்லாம் வீட்டிற்கு வந்த பிறகு ஒவ்வொரு உண்மையாக மீனாவிற்கு தெரிய வந்தது. அப்படி தான் இந்த ரூ.42000 டைனிங் டேபிளும். கடைசியாக இதற்கெல்லாம் பணம் ஏது என்று கேட்க, அது அப்பா கொடுத்த ரூ.10 லட்சம் என்று செந்தில் சொல்ல, அது என்னுடைய பணம். மாமா நான் ஆபிஸில் வாங்கிய லோனை அடைக்க எனக்கு கொடுத்த பணம் என்று சொல்ல என்ன மீனா உன்னுடைய பணம், என்னுடைய பணம் என்று பிரித்து பேச ஆரம்பித்துவிட்ட, நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதெல்லாம் நான் வாங்கினான். நீ வாங்கிய லோனை நான் கட்டிவிடுகிறேன் என்றார்.
செந்தில் மற்றும் மீனா சண்டை
ஆனால், அதில் துளி கூட எனக்கு நம்பிக்கை இல்லை என்று அப்படி இப்படி பேச கடைசியில் இருவரும் சண்டை போட்டு ஆளுக்கொரு மூலைக்கு சென்றனர்.
மனநல காப்பகத்திலிருந்து வந்த மீரா மிதுன் – பிடிவாரண்டை திரும்ப பெற்ற நீதிமன்றம்!