நடிகை மீரா மிதுன் மன நல காப்பகத்திலிருந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான மீரா மிதுனைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு முன்னதாக ரோமியோ ஜூலியட், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், எந்தப் படமும் அவரது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 அவருக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால், அந்த சீசனில் அவர் 34 நாட்கள் தாக்குபிடித்த நிலையில் 35ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்த மீரா மிதுன் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டார். மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Diwali Movies : டியூட் vs பைசன் vs டீசல் - கோலிவுட்டில் தீபாவளி வின்னர் யார்?

கைதுக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மீரா மிதுன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர் மன அழுத்தம் காரணமாக மன நல காப்பாகத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தான அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜரான மீரா மிதுனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை திரும்ப பெற நீதிமன்றம் முடிவு செய்தது.

இதற்காக போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டது. போலீஸ் தரப்பில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றது. ஆனால், இப்போது மீரா மிதுன் மனநல காப்பகத்தில் தான் இருக்கிறாரா அல்லது நீதிமன்றத்தில் ஆஜராக அங்கிருந்து வந்தாரா என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.

நவீனை காப்பாற்றிய கார்த்திக்; சிக்கினான் சிவனாண்டி; கார்த்திகை தீபம் அப்டேட்!