- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜீ தமிழின் நாயகன் – 6ஆவது முறையாக (டபுள் ஹாட்ரிக்) சிறந்த நடிகருக்கான ஜீ தமிழ் விருது வென்ற கார்த்திக் ராஜ்!
ஜீ தமிழின் நாயகன் – 6ஆவது முறையாக (டபுள் ஹாட்ரிக்) சிறந்த நடிகருக்கான ஜீ தமிழ் விருது வென்ற கார்த்திக் ராஜ்!
Karthik Raj Won Favourite Actor award for ZTKV 2025 : ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நாயகன் கார்த்திக் ராஜ் தொடர்ந்து 6ஆவது முறையாக ஃபேவரைட் நடிகருக்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகளில் விருது வென்றுள்ளார்.

கார்த்திக் ராஜ், கார்த்திகை தீபம் சீரியல்
காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர் தான் கார்த்திகை தீபம் சீரியல் நாயகன் கார்த்திக் ராஜ். இவர், வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். சிறு வயதிலேயே சென்னைக்கு வந்த கார்த்திக் 2011 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடித்து வருகிறார். ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மாற்றிக் கொண்டார். இவருடைய அப்பா 30 ஆண்டு காலம் சினிமாவில் இருந்துள்ளார். தயாரிப்பாளர் ஏ எல் ஸ்ரீனிவாசனுக்கு புரோடக்ஷன் மேனேஜராக இருந்தவர். எம்ஜிஆருக்கு உதவியாளராகவும் கூட இருந்துள்ளார்.
கார்த்திக் ராஜ் அறிமுகம்
கார்த்திக் ராஜ் சினிமாவில் அறிமுகமாக இதுவும் ஒரு காரணம். இப்படி சினிமா பின்னணியை வைத்துக் கொண்டு சினிமாவில் சாதித்து வருகிறார். இன்றைய இளைஞர்களுக்கு கார்த்திக் ராஜ் தான் முன்னுதாரணமாக விளங்குகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளை ஒருங்கிணைக்கும் வேலையை செய்து வந்தார்.
கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை (கே5)
அதன் பிறகு தான் அவருக்கு கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை (கே5) சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடிகை ஸ்ருதி ராஜ் உடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் 2014ல் ஜோடி நம்பர் 1 சீசன்7ல் நான்சி ஜெனிஃபர் உடன் இணைந்து நடனம் ஆடினார். ஆனால் அந்த ரியாலிட்டி ஷோவில் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
465 மற்றும் நாளு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை
தொடர்ந்து சின்னத்திரையில் கால் பதித்து வந்த கார்த்திக் ராஜிற்கு 465 மற்றும் நாளு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இந்த 2 படங்களுமே பெரியளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து விஜய் டிவியில் பல ஆண்டுகள் பணியாற்றி வந்த கார்த்திக் ராஜிற்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி செம்பருத்தி என்ற தொலைக்காட்சி தொடரில் லீடு ரோலில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தது.
இதில் ஆதித்யா என்ற ரோலில்
இதில் ஆதித்யா என்ற ரோலில் பெரிய பணக்கார வீட்டு பையனாக நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இன்று ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். இந்த சீரியலுக்கு பிறகு முகிலன் என்ற வெப் சீரிஸில் நடித்தார். ஆனால், இந்த சீரிஸ் பெரிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம்
அப்போது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் என்ற சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், லீடு ரோலில் கார்த்திக் ராஜ் நடித்தார். இந்த சீரியலில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 2ஆவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கார்த்திகை தீபம் சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஜீ தமிழ் குடும்ப விருதுகள்
இவர் ஒருவருக்காகத்தான் இந்த சீரியலே ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது என்று கூட சொல்லலாம். அந்தளவிற்கு தமிழக மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் 2025 ஆம் ஆண்டுக்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் எபிசோடு நடந்த நிலையில், இந்த வாரம் 2ஆவது எபிசோடு நடக்கிறது. இது தொடர்பான புரோமோ வீடியோவில் கார்த்திக் ராஜ் தொடர்ந்து 6ஆவது முறையாக விருது வென்றுள்ளார்.
சிறந்த ஃபேவரைட் நடிகருக்கான விருது
சிறந்த ஃபேவரைட் நடிகருக்கான விருது அவருக்கு வழங்கப்படுகிறது. பிரபல இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் தான் இந்த விருதை காரத்திக்கிற்கு வழங்குகிறார். இது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாக இது போன்று பல விருதுகளை கார்த்திக் வென்றுள்ளார். அதுமட்டுமின்றி 3ஆவது முறையாக ஹாட்ரிக் விருது கார்த்திக் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகள் ஜீ தமிழ் குடும்ப விருதுகள், 2021 ஆம் ஆண்டு கலாட்டா தமிழ் விருதுகள், 2022 ஆம் ஆண்டு ஜீ தமிழ் குடும்ப விருதுகள் என்று பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.