MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Oct 18 அதிசார குரு பெயர்ச்சி: மகர ராசி நேயர்களே, குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை.! இந்த விஷயங்களில் கவனம் தேவை.!

Oct 18 அதிசார குரு பெயர்ச்சி: மகர ராசி நேயர்களே, குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை.! இந்த விஷயங்களில் கவனம் தேவை.!

Today Rasi Palan : அக்டோபர் 18, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Oct 17 2025, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
அக்டோபர் 18, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

அக்டோபர் 18, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் மகர ராசியின் ஆறாம் இடத்தில் குரு பெயர்ச்சி ஆவதால், இந்த அதிசார காலத்தில் உங்களின் முயற்சி மற்றும் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். சவால்களை சமாளிக்க வேண்டிய சூழல் இருக்கலாம். மறைமுக எதிரிகள் மற்றும் போட்டியாளர்களால் சலசலப்புகள் ஏற்படலாம். அலுவல் ரீதியான பயணங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. செரிமானம் தொடர்பான சிக்கல்கள் அல்லது மன அழுத்தத்தால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 

நிதி நிலைமை:

நிதி நிலைமை இன்று நன்றாக இருக்கும். கடின உழைப்பு மற்றும் நுணுக்கமான திட்டமிடல் மூலம் நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். எதிர்பாராத செலவுகள் அல்லது கடன்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே செலவுகளை கட்டுக்குள் வைப்பது அவசியம். சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு சிலருக்கு அமையலாம். சிலருக்கு எதிர்பாராத வழிகளில் இருந்து பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கை:

குருவின் அதிசார பெயர்ச்சி காரணமாக குடும்ப உறவுகள் இன்று வலுவாக இருக்கும். தாயாருடன் உறவு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காதல் உறவுகள் இனிமையானதாக இருக்கும். திருமணமாகாதவர்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் முயற்சிகள் தேவைப்படலாம். ஒழுக்கம் மற்றும் கவனத்துடன் படிப்பவர்களுக்கு வெற்றி உண்டு.

பரிகாரங்கள்:

அதிசார குரு பெயர்ச்சி என்பதால் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. தட்சணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். ஆஞ்சநேயர் அல்லது விநாயகர் பெருமானை வழிபடுவது காரியங்களில் ஏற்படும் தடைகளை நீக்கி வெற்றி பெற உதவும். வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்வது அல்லது அன்னதானம் வழங்குவது நற்பலன்களை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி 2025 பலன் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒட்டக சிலையை வீட்டில் வைப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?
Recommended image2
மார்ச் மாதம் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.! இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.! செல்வ செழிப்பை அடையப்போறீங்க.!
Recommended image3
மார்ச் 2026 முதல் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Oct 18 அதிசார குரு பெயர்ச்சி: கும்ப ராசி நேயர்களே, குரு பகவான் அருளால் இன்று கோடீஸ்வர யோகம் பெறுவீர்கள்.!
Recommended image2
Oct 18 அதிசார குரு பெயர்ச்சி: மீன ராசி நேயர்களே, குருவின் அருளால் இன்று உங்களுக்கு எல்லாமே கிடைக்கபோகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved