MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Oct 18 அதிசார குரு பெயர்ச்சி: மீன ராசி நேயர்களே, குருவின் அருளால் இன்று உங்களுக்கு எல்லாமே கிடைக்கபோகுது.!

Oct 18 அதிசார குரு பெயர்ச்சி: மீன ராசி நேயர்களே, குருவின் அருளால் இன்று உங்களுக்கு எல்லாமே கிடைக்கபோகுது.!

Today Rasi Palan: அக்டோபர் 18, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Oct 17 2025, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
அக்டோபர் 18, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

அக்டோபர் 18, 2025 மீன ராசிக்கான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான முடிவுகளை தரக்கூடிய நாளாக இருக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகளில் இன்று நல்ல முடிவுகளைக் காண்பீர்கள். இன்று உங்களுக்குள் நேர்மறை ஆற்றலை உணர்வீர்கள் புதிய தொடர்புகள் வலுப்படும். கிரகங்களின் நிலை, குறிப்பாக குருவின் அதிசார பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பல விஷயங்களில் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது.
 

நிதி நிலைமை:

இன்று பொருளாதார நிலை சீராக இருக்கும். நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பங்குச்சந்தை போன்ற முதலீடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறலாம். வீட்டு தேவைகளுக்காக அல்லது ஆடம்பரத்திற்காக சில செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதலீடுகள் அல்லது பெரிய நிதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து விட்டு எடுப்பது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாகவும், இணக்கமாகவும் இருக்கும். உறவுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு தெளிவாக வெளிப்படும். அன்பு மற்றும் புரிதலுடன் காதல் வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். பெரியவர்களின் வழிகாட்டுதல் உதவி செய்யும். மற்றவர்களுக்கு உதவி செய்வது மன அமைதியைத் தரும்.

பரிகாரங்கள்:

இன்று குரு பெயர்ச்சி நடப்பதாலும் உங்கள் ராசியின் அதிபதி குரு என்பதாலும் குரு பகவானை வணங்குவது நன்மை தரும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாற்றி சாற்றி அவருக்கு உகந்த மந்திரங்களை ஜெபிப்பது பலன்களை அதிகரிக்கும். கோவிலுக்கு உளுந்தம் பருப்பு தானம் செய்வது நல்ல பலன்களைத் தரும். ஏழை, எளியவர்கள், இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி 2025 பலன் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒட்டக சிலையை வீட்டில் வைப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?
Recommended image2
மார்ச் மாதம் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.! இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.! செல்வ செழிப்பை அடையப்போறீங்க.!
Recommended image3
மார்ச் 2026 முதல் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: 100 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் சனி உருவாக்கும் தன ராஜயோகம்.! கோடிகளில் புரளப் போகும் ராசிகள்.!
Recommended image2
Astrology: 18 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் நண்பர்கள்.! செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved