- Home
- Astrology
- Astrology: 100 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் சனி உருவாக்கும் தன ராஜயோகம்.! கோடிகளில் புரளப் போகும் ராசிகள்.!
Astrology: 100 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் சனி உருவாக்கும் தன ராஜயோகம்.! கோடிகளில் புரளப் போகும் ராசிகள்.!
Dhana Rajyog: இந்த வருடம் தீபாவளி தினத்தில் சனி பகவான் சக்தி வாய்ந்த தன ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறார். இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் பலன்களை அனுபவிக்க உள்ளன ராசிக்காரர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தன ராஜயோகம் 2025
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கும் சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். 2027 வரை அவர் மீன ராசியில் இருப்பார். இந்த நிலையில் அவர் பிற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது பிற கிரகங்களை நேரடியாக பார்த்தோ யோகங்களை உருவாக்குகிறார். அந்த வகையில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி தினத்தன்று அவர் உருவாக்கும் ‘தன ராஜயோகம்’ சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தர உள்ளது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
- தீபாவளி தினத்தில் சனி பகவான் உருவாக்கும் தன யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் பல நேர்மையான பலன்களை அனுபவிக்க உள்ளனர்.
- உங்கள் ராசியின் அதிர்ஷ்டம் மற்றும் கர்மாவின் அதிபதியாக விளங்கும் சனி தேவர் லாப வீட்டில் அமர இருக்கிறார்.
- இதன் காரணமாக உங்கள் வருமானம் கணிசமாக உயரும்.
- இந்த காலகட்டத்தில் உங்கள் போட்டியாளர்களை விட நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவிப்பீர்கள்.
- தொழிலில் இருந்த எதிரிகள், போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.
- இதன் காரணமாக உங்கள் வருமானத்தில் குறிப்பிடத் தகுந்த அதிகரிப்பை காண முடியும்.
- சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, கௌரவம், அந்தஸ்து உயரும்.
- ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்தும் லாபம் கிடைக்கும்.
- தங்கம், நிலம் போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.
மகரம்
- தன ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள்.
- சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார்.
- ஜாதகத்தில் மூன்றாவது வீடு என்பது தகவல் தொடர்பு, உடன் பிறந்தவர்கள், முயற்சி, படைப்பாற்றல், துணிச்சல் ஆகியவற்றை குறிக்கிறது.
- எனவே இந்த காலத்தில் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- நீங்கள் வேலை மற்றும் தொழிலில் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
- இதன் காரணமாக உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
- நீங்கள் நம்பிக்கையுடன் செய்யும் செயல்கள் உங்களுக்கு நிதி ஆதாயங்களை அள்ளித் தரும்.
- உங்கள் எதிரிகளை வீழ்த்தி செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.
- சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.
- உடன் பிறந்தவர்களின் ஆதரவு அதிகரிக்கும்.
மிதுனம்
- தன ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மைகளைத் தரும்.
- சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து செயல் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
- இதன் காரணமாக நீங்கள் எந்த வேலையை எடுத்தாலும் அதில் வெற்றியைக் காண்பீர்கள்.
- புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரமாகும்.
- வேலையில்லாமல் இருந்து வருபவர்கள் அல்லது அதிருப்தியில் வேலை பார்த்து வருபவர்களுக்கு வேறு இடத்தில் நல்ல வேலை கிடைக்கலாம்.
- தொழிலதிபர்கள் எதிர்பார்த்து இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.
- நீங்கள் நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் இடத்திற்கு செல்வீர்கள்.
- புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
- தந்தை வழி உடனான உறவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)