- Home
- Astrology
- Astrology: துலாம் ராசிக்கு பெயர்ச்சியான சூரியன்.! அக்.17 முதல் லக்கி பாஸ்கராக மாறப்போகும் 5 ராசிகள்.!
Astrology: துலாம் ராசிக்கு பெயர்ச்சியான சூரியன்.! அக்.17 முதல் லக்கி பாஸ்கராக மாறப்போகும் 5 ராசிகள்.!
Surya peyarchi rasi palangal: சூரிய பகவான் அக்.17 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக 5 ராசிகள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்
ஜோதிடத்தின் படி, சூரியன் ஒரு குறிப்பிட்ட காலம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு, சூரியன் பெயர்ச்சி அல்லது சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. இது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை, தைரியம், தலைமைப்பண்பு ஆகியவற்றின் காரகராக விளங்கும் சூரியன், அக்டோபர் 17, 2025 அன்று கன்னி ராசியில் இருந்து சுக்கிரனின் வீடான துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
ஜோதிடத்தின் படி, துலாம் ராசி என்பது சூரியனுக்கு நீச்ச வீடு ஆகும். அதாவது, இந்த ராசியில் சூரியனின் இயல்பான வலிமை சற்றுக் குறையும். இருப்பினும் 5 ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் நன்மைகளை அனுபவிக்க உள்ளனர் இந்த கட்டுரையில் அனைத்து ராசிகளிலும் காணப்படக்கூடிய பொதுவான தாக்கங்கள் மற்றும் பலன் பெறும் ராசிகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான தாக்கங்கள்:
சூரியன் நீச்சம் அடைவதால், சிலருக்கு தன்னம்பிக்கை சற்று குறையலாம் அல்லது முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படலாம். சுயபரிசோதனை மற்றும் சுயக்கட்டுப்பாட்டிற்கு இது உகந்த நேரம்.
உறவுகளிம் ஆதிக்கம் செலுத்துவதை விட, பொறுமை, விட்டுக்கொடுத்தல் மற்றும் நிதானமான அணுகுமுறையே வெற்றியைத் தரும்.
துலாம் ராசியில் சூரியன் நீச்சம் பெறுவதால், இந்த ராசி உட்பட சில ராசிகளுக்கு உடல்நலம், வேலை அல்லது உறவுகளில் சில சவால்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேஷம்
சூரியன் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். இது தொழில் கூட்டாண்மை, திருமண வாழ்க்கை மற்றும் பொது உறவுகளைக் குறிக்கிறது. இந்த காலகட்டத்தில், தொழில் கூட்டாண்மைகளில் வெற்றி கிடைக்கும். இருப்பினும், துணையுடனான உறவில் பொறுமையும், விட்டுக் கொடுத்தலும் தேவை. பணியிடத்தில் அதிகாரிகளிடம் இருந்து வரும் அழுத்தங்களை அமைதியான முறையில் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
மிதுனம்
சூரியன் உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். இது புத்திசாலித்தனம், காதல் உறவு மற்றும் குழந்தைகள் ஆகியவற்றைக் குறிக்கும் வீடாகும். உங்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். மாணவர்கள் கூடுதல் முயற்சி எடுத்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
தனுசு
சூரியன் உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது லாப ஸ்தானம் ஆகும். இதனால், லாபம் பெருகும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேற வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் செயல்திறனை வெளிப்படுத்துவதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றைப் பெறலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
மகரம்:
சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். இது கர்ம ஸ்தானம் (தொழில்/வேலை) என அழைக்கப்படுகிறது. இது சிறப்பான பலன்களைத் தரும் அமைப்பாகும். புத்திசாலித்தனமும், வேகமும் அதிகரிக்கும். பல துறைகளிலும் முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக அதிகாரம், அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் இலக்குகளை அடையலாம்.
கும்பம்:
சூரியன் உங்கள் ராசியின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது பாக்கியஸ்தானம் ஆகும். சிலருக்கு அதிர்ஷ்டமும், எதிர்பாராத நன்மைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. உயர் கல்வி, ஆன்மீகம் மற்றும் நீண்ட தூரப் பயணங்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். தந்தையுடனான உறவில் இணக்கம் தேவை. அதிர்ஷ்டம் கிடைக்கும் அதே சமயத்தில் கவனத்துடனும் செயல்பட வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)