- Home
- Astrology
- Astrology: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! இவர்களுக்கு பொன், பொருள், வசதிகள் குவியப் போகுது.!
Astrology: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! இவர்களுக்கு பொன், பொருள், வசதிகள் குவியப் போகுது.!
Aippasi Month rasi palangal: பிறக்க இருக்கும் ஐப்பசி மாதமானது ஐந்து ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஐப்பசி மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்
சூரியன் (அக்டோபர் 17 - நவம்பர் 16): சூரியனின் பெயர்ச்சியை வைத்தே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் அக்டோபர் 17ஆம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆக இருக்கிறார். இதன் காரணமாக ஐப்பசி மாதம் பிறக்க இருக்கிறது. இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.
குரு (அக்டோபர் 18): ஐப்பசி மாதத்தின் தொடக்கத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்க இருக்கிறார். குருவின் வலிமையான இந்த நிலையானது பல ராசிகளுக்கு நன்மை தரக்கூடும். குறிப்பாக அவரது பார்வை பெறும் ராசிகள், நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர்.
சுக்கிரன் (நவம்பர் 2 - நவம்பர் 26): சுக்கிர பகவான் நவம்பர் 2 ஆம் தேதி அன்று தனது சொந்த வீடான துலாம் ராசிக்கு சென்று ஆட்சி பலம் பெறுகிறார். சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவது கலை, அழகு, காதல், ஆடம்பர விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். மேலும் சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்து சுக்ராதித்ய யோகம் உருவாவது பல ராசிகளுக்கு எதிர்பாராத நன்மைகளைத் தரும்.
செவ்வாய் (அக்டோபர் 27 - டிசம்பர் 7): செவ்வாய் பகவான் அக்டோபர் 27 ஆம் தேதி தனது சொந்த வீடான விருச்சிக ராசிக்கு சென்று ஆட்சி பலம் பெறுகிறார். செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெறுவது தைரியம், துணிச்சல், நிலம், சகோதர உறவுகள் ஆகியவற்றில் வலு சேர்க்கும்.
புதன் (அக்டோபர் 24 - நவம்பர் 23): புதன் பகவான் அக்டோபர் 24 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
சனி மற்றும் ராகு: சனிபகவான் வக்கிர இயக்கத்தில் பயணிக்கிறார். லாப ஸ்தானத்தில் கும்ப ராசியில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். சனியும் ராகவும் நீண்ட நாட்களாக இதே நிலையில் இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு குழப்பம், தாமதம் ஆகியவை ஏற்படலாம்.
ரிஷபம்
ஐப்பசி மாதத்தில் சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணலாம். போட்டிகளில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம், வேலைகளில் வெற்றி ஆகியவை உண்டாகும். வியாபாரம் மற்றும் தொழில் ரீதியாக சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்
குரு பகவான் கடக ராசியிலிருந்து உச்சமாகி இருப்பதும், மற்ற கிரகங்களின் சாதகமான சஞ்சாரமும் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் எதிர்பாராத ஏற்றம், பெயர், புகழ், பொருளாதாரம் உயர்வு ஆகியவை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.
கன்னி
சுக்கிரன் தன் சொந்த வீடான துலாம் ராசிக்குச் செல்வதும், மற்ற கிரகங்களின் பார்வையும் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த காலக்கட்டத்தில் அற்புதமான மாற்றங்கள் நிகழும். உத்தியோகம் மற்றும் தொழிலில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் வரிசை கட்டும். சுப காரியத் தடைகள் நீங்கி, திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் பலவித நன்மைகள் உண்டாகும். ஐப்பசி மாதத்தில் பெயர், புகழ், பொருளாதாரம் உயரும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் இணையலாம். பழைய கடன்களை அடைத்து மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்
மீன ராசியின் அதிபதியான குரு உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும், சுக்கிரனால் 'சுக்ராதித்ய யோகமும்' ஏற்படுகிறது. இதன் காரணமாக மனநிறைவான வாழ்க்கை அமையும். கடன் சுமை குறையும், கவலைகள் நீங்கும். இடமாற்றம், ஊர் மாற்றம் இனிமையாக இருக்கும். பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் லாபம் கூடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

