- Home
- Astrology
- Astrology: சனியின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்.! தீபாவளிக்குப் பின் 3 ராசிகள் சொத்துக்களை வாங்கி குவிக்கப் போறீங்க.!
Astrology: சனியின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்.! தீபாவளிக்குப் பின் 3 ராசிகள் சொத்துக்களை வாங்கி குவிக்கப் போறீங்க.!
Chevvai Peyarchi: தீபாவளிக்குப் பிறகு செவ்வாய் பகவான் சனியின் நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்திற்குள் பிரவேசிக்க இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வம் மற்றும் சொத்துக்களை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அனுஷ நட்சத்திரத்திம் செல்லும் செவ்வாய்
ஜோதிடத்தின்படி கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதுடன், நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக விளங்கும் செவ்வாய் பகவான், தற்போது விசாக நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். அவர் தீபாவளி பண்டிகைக்கு பிறகு அதாவது நவம்பர் 2025 இல் சனியின் ஆதிக்கத்தில் உள்ள அனுஷ நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். இந்த மாற்றம் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
- செவ்வாய் பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
- எதிர்பாராத வகையில் திடீர் பணவரவுகள் கிடைக்கலாம்.
- நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
- கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
- பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வை எதிர்பார்ப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
- புதிய திட்டங்கள் அல்லது தலைமைப் பொறுப்புகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
- உங்கள் பேச்சில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- குடும்ப உறவுகள் மகிழ்ச்சிகரமானதாக மாறும்.
- வேலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- உங்கள் தைரியம் மற்றும் வலிமை இந்த காலக்கட்டத்தில் உயரும்.
- இதன் காரணமாக துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றியை ஈட்டுவீர்கள்.
மகரம்
- செவ்வாயின் நட்சத்திர மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு சுபமாக அமையும்.
- இந்த நேரத்தில் நீங்கள் புதிய வாகனம் அல்லது புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- தங்கம், வெள்ளி, நிலம் போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.
- செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
- உங்கள் நிதி நிலை மேம்படும்.
- வேலை செய்யும் இடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
- உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
- தொழில் செய்பவர்களுக்கு தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
- இதன் காரணமாக லாபம் இரட்டிப்பாகும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைக்கான வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர மாற்றம் சாதகமான பலன்களை தர உள்ளது.
- இந்த காலக்கட்டத்தில் உங்களின் தன்னம்பிக்கை உயரும்.
- நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சனைகள் நீங்கும்.
- புதிய வீடு அல்லது நிலம் வாங்கும் கனவு நிறைவேற வாய்ப்பு உள்ளது.
- வேலை பார்ப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
- நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல பதில்கள் கிடைக்கும்.
- தொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.
- இதன் காரணமாக நிதி ஸ்திரத்தன்மை ஏற்படும்.
- உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
- குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)