- Home
- Astrology
- Astrology: 12 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் குரு-சுக்கிரன்.! தீபாவளிக்கு முன் அதிர்ஷடத்தைப் பெறும் ராசிகள்
Astrology: 12 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் குரு-சுக்கிரன்.! தீபாவளிக்கு முன் அதிர்ஷடத்தைப் பெறும் ராசிகள்
Panchank Rajyog: குரு சுக்கிரன் இணைவால் அக்டோபர் 19, 2025 அன்று பஞ்சாங்க யோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பஞ்சாங்க ராஜயோகம் 2025
வேத ஜோதிடத்தின் படி சுக்கிர பகவான் செல்வம், மகிழ்ச்சி, ஆடம்பரம், பொன், பொருள், வசதிகள் ஆகியவற்றின் கிரகமாக அறியப்படுகிறார். குரு பகவான் ஞானம், அறிவு, கல்வி, செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இந்த இரண்டு கிரகங்களும் குறிப்பிட்ட கோணத்தில் இணையும் பொழுது சக்தி வாய்ந்த ‘பஞ்சாங்க ராஜயோகம்’ உருவாகிறது.
அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 3:21 மணிக்கு குரு மற்றும் சுக்கிரன் ஒருவருக்கொருவர் 72 டிகிரி கோணத்தில் அமைகின்றனர். இந்த அரிய யோகம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாவதால் தீபாவளிக்கு முன்பாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்க இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
- மேஷ ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனின் ‘பஞ்சாங்க ராஜயோகம்’ பல வழிகளில் நன்மை பயக்கவிருக்கிறது.
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான மற்றும் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
- பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது விரும்பிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- புதிய வேலை தேடுபவர்கள் அதில் வெற்றியை அடைவீர்கள்.
- சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
- உடல் மற்றும் மன அழுத்தங்கள் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- ஆன்மீக விஷயங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள்.
கன்னி
- கன்னி ராசிக்காரர்களுக்கு ‘பஞ்சாங்க ராஜயோகம்’ பல வழிகளிலும் சாதகமான பலன்களை அளிக்க இருக்கிறது.
- உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் காலம் நெருங்கி உள்ளது.
- வணிகத்தில் லாபம் இரட்டிப்பாவதால் பொருளாதார நிலை வலுப்பெறும்.
- பங்குச்சந்தை முதலீடுகள் மூலமாகவும் அல்லது எதிர்பாராத வழிகளிலும் நல்ல பணத்தை ஈட்ட முடியும்.
- உங்கள் தைரியமும், மன வலிமையும் அதிகரிக்கும்.
- உங்கள் பேச்சுத் திறமையின் மூலம் பெரிய திட்டங்கள் அல்லது ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
- உங்கள் உழைப்புக்கு ஏற்ற புதிய வெற்றிக்கான பாதைகள் திறக்கப்படும்.
- திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான யோகம் கிடைக்கும்.
மகரம்
- மகர ராசிக்காரர்களுக்கு 'பஞ்சாங்க யோகம்' பல வழிகளில் நன்மைகளை வாரி வழங்கும்.
- இந்த நேரத்தில் குரு பகவான் உச்சம் பெற்று ஏழாவது வீட்டில் இருப்பதால், பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.
- மகர ராசியினரின் திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் பொருத்தமான வரன் தேடி வரும்.
- கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்கும்.
- வருமானத்தைப் பெருக்குவதற்கு புதிய வழிகள் உருவாகும். இதன் மூலம் உங்களின் நிதி நிலைமை மேம்படும்.
- உங்களின் முடிவெடுக்கும் திறன் மேம்படும், இது எதிர்காலத்திற்கான சிறப்பான முடிவுகளை எடுக்க உதவும்.
- சமூகத்தில் உங்களின் கௌரவமும், ஆளுமையும் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)