- Home
- Astrology
- Astrology: பலவீனமான ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான்.! 7 ராசிகள் வாழ்க்கையில் பூகம்பம் வரப்போகுது.!
Astrology: பலவீனமான ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான்.! 7 ராசிகள் வாழ்க்கையில் பூகம்பம் வரப்போகுது.!
Surya peyarchi rasi palangal: அக்டோபர் 17 ஆம் தேதி சூரிய பகவான் துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார். துலாம் ராசியானது சூரிய பகவானுக்கு பலவீனமான ராசியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக 7 ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களை அனுபவிக்க உள்ளனர்.

சூரியன் பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் சூரிய பகவான் அக்டோபர் 17 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார். துலாம் ராசியில் சூரியன் நீச்சம் அடையும் என்பதால் இது சில ராசிக்காரர்களுக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடும். சூரியனின் துலாம் ராசி சஞ்சாரத்தால் எந்த ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களை அனுபவிக்க உள்ளனர் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வணிக உறவுகளில் கவனம் செலுத்த வேண்டி வரும். திருமணமானவர்களுக்கு இந்த காலக்கட்டம் சற்று சவாலானதாக இருக்கலாம். உங்கள் துணையுடன் சண்டைகள் வரலாம். ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்து, பரஸ்பர புரிதலை பேண வேண்டியது அவசியம். உங்கள் உடல் நலத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல், தலைவலி, சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் துலாம் ராசி பெயர்ச்சியானது புதிய சவால்களை கொண்டு வரக்கூடும். உறவினர்களுடன் சண்டைகள் வரலாம். குடும்ப உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். துணையுடன் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகலாம். வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள் வாட்டி வதைக்கலாம். இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கையும் குறையக்கூடும். சில சமயங்களில் எதிர்மறையான செய்திகளும் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி எதிர்மறையான பலன்களை தர உள்ளது. இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் அதிக சவால்களை சந்திக்க நேரிடலாம். குடும்பம் மற்றும் வீடு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தாயாரின் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் சொத்து சார்ந்த விஷயங்களில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
சிம்மம்
சூரியனின் நீச்ச நிலை காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் தன்னம்பிக்கை குறைந்து முடிவுகளை எடுப்பதில் சிரமம் ஏற்படலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் நீங்கள் வேலையிழப்புகள் அல்லது பிற சங்கடங்களை சந்திக்க நேரிடும்.
கன்னி
சூரியனின் பலவீனமான நிலை காரணமாக கன்னி ராசிக்காரர்கள் சவால்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் குறிப்பிடத் தகுந்த இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும். எனவே எந்த ஒரு பெரிய நிதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னரும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து எடுக்க வேண்டும். உடல் நலத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்
சூரியனின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கும் சிறிது உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். துலாம் ராசிக்காரர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாயு, அமிலத்தன்மை, ஒவ்வாமை அல்லது செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத பதற்றத்தால் மன அழுத்தம் ஏற்படலாம். வேலையிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய சூழல்கள் வரலாம். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டலாம். இது மோதல்களுக்கு வழிவகுக்கும். எனவே நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்த சில தினங்கள் சவாலானதாக இருக்கும். அதிர்ஷ்டம் குறைவாகக் காணப்படும். எந்த ஒரு பணியையும் முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் பின்னடைவு ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்கள் பாதகமாக இருக்கலாம். இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். எனவே சிறிய விஷயங்களை கூட பொறுமையாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். உறவுகளில் நல்லிணக்கத்தை பேண வேண்டியது அவசியம்.