- Home
- Astrology
- Astrology: ஒரே ராசியில் இணையும் மும்மூர்த்திகள்.! தீபாவளி முதல் கோடிகளில் புரளப் போகும் 5 ராசிகள்.!
Astrology: ஒரே ராசியில் இணையும் மும்மூர்த்திகள்.! தீபாவளி முதல் கோடிகளில் புரளப் போகும் 5 ராசிகள்.!
Trigrahi Yog 2025: இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பாக அரிய திரிகிரக யோகம் உருவாக இருக்கிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசியில் இணையும் மும்மூர்த்திகள்
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இணைப்பு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு முன்பாக அரிய சிறப்பான திரிகிரக யோகம் உருவாக இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் கிரகங்களின் ராஜாவான சூரியன், கிரகங்களின் இளவரசனான புதன், கிரகங்களின் தளபதியான செவ்வாய் ஆகியோர் துலாம் ராசியில் இணைய இருக்கின்றனர். இதன் காரணமாக உருவாகும் திரிகிரக யோகம் ஐந்து ராசிகளுக்கு பலன்களை வாரி வழங்க உள்ளது.
திரிகிரக யோகம் எப்போது உருவாகும்?
அக்டோபர் 17 ஆம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். அக்டோபர் 3 ஆம் தேதி முதல் புதன் பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். செப்டம்பர் 13 தொடங்கி செவ்வாய் பகவானும் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் இந்த மூன்று செல்வாக்கு மிக்க கிரகங்களின் கலவையானது தீபாவளியை ஜோதிட ரீதியாக இன்னும் மங்களகரமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் மாற்றுகிறது. இந்த மும்மூர்த்திகளின் சேர்க்கையானது ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், நிதி முன்னேற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கான பாதைகளை திறக்கிறது.
ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் நிதி வளத்தை கொண்டு வரவுள்ளது.
- நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் தற்போது வேகம் பெறும்.
- தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆர்டர்களைப் பெறலாம்.
- முதலீடுகள் காரணமாக கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள்.
- பணி மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
- அரசுத் தேர்வுகள் அல்லது நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கலாம்.
- வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.
கடகம்
- கடக ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி முன்னேற்றத்தையும், கௌரவத்தையும் தரும்.
- திரிகிரக யோகம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும்.
- பூர்வீக சொத்துக்கள் அல்லது பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம்.
- பூர்வீக சொத்துக்கள் உங்கள் வாரிசுகளின் கைகளுக்கு வந்து சேரலாம்.
- நீங்கள் ஒரு புதிய வீடு அல்லது வாகனத்தை வாங்குவீர்கள். உங்கள் பெற்றோர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும்.
- வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
- தங்கம், வெள்ளி, நிலம், மனை, புதிய வீடு உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.
கன்னி
- தீபாவளி தினத்தில் உருவாகும் திரிகிரக யோகமானது கன்னி ராசிக்காரர்களுக்கு செல்வ வளர்ச்சி மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- குறிப்பாக தொழிலதிபர்கள் அரசு ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
- பங்குச்சந்தை அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்பினால் இதே நல்ல நேரமாகும்.
- வேலையில் இருந்த அதிக பணிச்சுமை குறையத் தொடங்கும்.
- உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள்.
- இதன் காரணமாக மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
- மன அழுத்தம் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலைமை வலுப்பெறும்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் அதிர்ஷ்டம் மற்றும் கர்மா இரண்டையும் பலப்படுத்தும்.
- இந்த நேரத்தில் உங்கள் முயற்சிகளுக்கான முழு பலன்கள் கிடைக்கும்.
- வெளிநாடுகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள் அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம்.
- மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
- உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உறவு சுமூகமாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்கும்.
- குடும்பத்தில் அமைதி நிலவும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் புதிய தொடக்கங்களையும், முன்னேற்றத்திற்கான பாதைகளையும் திறக்கும்.
- நீங்கள் தொழில் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு இருந்தால், இது சரியான நேரமாகும்.
- புதிய தொழில் தொடங்க காத்திருப்பவர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை மாறுதலுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும்.
- ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு தலைமைப் பொறுப்புக்கள் வழங்கப்படலாம் அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
- முதலீடுகளில் இருந்தும் லாபம் கிடைக்கும். காதல் உறவுகள் ஆழமாகும். திருமணம் குறித்த சுப செய்திகள் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)