- Home
- Astrology
- சனியின் நட்சத்திரத்தில் செவ்வாய்.! இந்த 5 ராசிகளுக்கு அடிக்கும் ராஜயோகம்.! உங்க ராசி இருக்கா?
சனியின் நட்சத்திரத்தில் செவ்வாய்.! இந்த 5 ராசிகளுக்கு அடிக்கும் ராஜயோகம்.! உங்க ராசி இருக்கா?
Sevvai Peyarchi 2026 in Uthirattathi Natchathiram : செவ்வாய் பகவான், சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதிக்குள் நுழைய இருக்கிறார். இது ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானின் உத்திரட்டாதி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியான நன்மைகளை வழங்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெற்றிக்கான பாதை எளிதாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம்.
ரிஷபம்
செவ்வாய் பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை காண்பீர்கள். இந்த காலகட்டத்தில் தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி வருமானம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன்கள் கைக்கு வந்து சேரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக அமையும். திருமணமானவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல தொடக்கத்தை குறிக்கிறது. குடும்பத்தில் இருந்த தகராறுகள், பிரச்சனைகள் சரி செய்யப்படும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றிணைவார்கள். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் மீண்டும் கை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சாதகமான பலன்களை காண்பார்கள். உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். ஆரோக்கியம் சிறப்பானதாக மாறும். தன்னம்பிக்கை வளரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலையில்லாத பட்டதாரிகளுக்கு நேர்காணலுக்கான அழைப்பிதழ்கள் வரும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்கள் வேலையில் சேர்வதற்கான கடிதத்தை பெறுவீர்கள்.
தனுசு
சனியின் நட்சத்திரத்தில் செவ்வாய் நுழைவது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கான முழு பலன்களையும் பெறுவீர்கள். சொத்து தகராறுகள் தீர்க்கப்படும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். மனைவி அல்லது மாமனார் வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

