- Home
- Astrology
- Oct 18 அதிசார குரு பெயர்ச்சி: தனுசு ராசி நேயர்களே, குரு அருளால் இன்று பல வழிகளில் பண வரவு கொட்டப் போகுது.!
Oct 18 அதிசார குரு பெயர்ச்சி: தனுசு ராசி நேயர்களே, குரு அருளால் இன்று பல வழிகளில் பண வரவு கொட்டப் போகுது.!
Today Rasi Palan : அக்டோபர் 18, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 18, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் நடக்கும் குரு பெயர்ச்சியானது தனுசு ராசியின் எட்டாம் வீட்டில் நிகழ இருக்கிறது. இது பொதுவாக கவலைத் தரக்கூடிய இடம் என்றாலும், குரு தனது உச்ச வீடான கடகத்தில் சஞ்சரிப்பதால் சில சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
தனுசு ராசியின் அதிபதியாக விளங்கும் குரு பகவானின் இந்த பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு காரியங்களில் வெற்றியைத் தரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, புதிய உற்சாகம் பிறக்கும். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், எதிர்பாராத உதவிகள் கிடைக்கலாம். பழைய பகைமையை மறந்து அனைவரிடத்திலும் நட்பு பாராட்டுவீர்கள்.
நிதி நிலைமை:
இன்று திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக இன்சூரன்ஸ் அல்லது பூர்வீக சொத்துக்கள் மூலமாக கைகளுக்கு பணம் வந்து சேரலாம். வராமல் இருந்த பழைய கடன்கள் அல்லது பணம் கைக்கு வந்து சேர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உங்கள் அறிவுரையை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்புக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிறிய பிரச்சனைகள் விலகி, நல்லிணக்கம் ஏற்படும். திருமணத் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் உறவு வலுப்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
பரிகாரங்கள்:
சிவாலயங்களுக்கு சென்று தட்சணாமூர்த்தி பகவானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்து விளக்கேற்றி வழிபடுங்கள். மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடலாம். முதியவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஆலயங்களில் துப்புரவு பணிகளில் ஈடுபடுவது நன்மை தரும். இன்று விநாயகர் அல்லது குலதெய்வ வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.