Rishab Shetty Blessings at Varanasi : காந்தாரா: சாப்டர் 1' படத்தின் வெற்றியில் திளைத்து வரும் நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி, வெள்ளிக்கிழமை வாரணாசிக்குச் சென்று அங்கு நடைபெற்ற கங்கா ஆரத்தியில் கலந்துகொண்டார்
காந்தாரா: சாப்டர் 1
'காந்தாரா: சாப்டர் 1' படத்தின் வெற்றியில் திளைத்து வரும் நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி, வெள்ளிக்கிழமை வாரணாசிக்குச் சென்று அங்கு நடைபெற்ற கங்கா ஆரத்தியில் கலந்துகொண்டார். அவர் படித்துறையில் பூஜையும் செய்தார். வாரணாசிக்கு புனிதப் பயணம் மேற்கொண்டது குறித்து ரிஷப் ஷெட்டி கூறுகையில், “இது எனது இரண்டாவது வாரணாசி பயணம். முதல் முறை, நான் என் குடும்பத்துடன் வந்தேன். காந்தாரா பட வேலைகளைத் தொடங்கியபோது, ஒருநாள் இங்கு வந்து சிவபெருமானின் ஆசிகளைப் பெற வேண்டும் என்று எங்களுக்குள் ஒரு வாக்குறுதி எடுத்துக்கொண்டோம்” என்றார்.
காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

'காந்தாரா: சாப்டர் 1' படம், துளுநாட்டில் உள்ள தெய்வ வழிபாட்டின் தோற்றத்தை மையமாகக் கொண்டது. இது நான்காம் நூற்றாண்டு கடம்ப வம்சத்தின் வேர்களைக் கண்டறிகிறது. காந்தாரா காடு மற்றும் அதன் பழங்குடி சமூகங்களின் பாதுகாவலரான பெர்மேவாக ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தெய்வங்களிடமிருந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கும் ஒரு அரச குடும்பத்திற்கும், அவர்களின் ஆட்சியை எதிர்க்கும் பழங்குடியினருக்கும் இடையிலான போராட்டத்தை கதை விவரிக்கிறது.
ரசிகர்களுக்கு முத்த தரிசனம் கொடுத்த நடிகை மேகா ஷெட்டி- வைரலாகும் எமோஜி!

துணை நடிகர்களில் ராகேஷ் பூஜாரி, ஹரிபிரசாந்த் எம்.ஜி, தீபக் ராய் பனாஜே, ஷானீல் கௌதம், நவீன் பொண்டேல் ஆகியோர் அடங்குவர். ஹோம்பாலே பிலிம்ஸ் பேனரின் கீழ் விஜய் கிரகந்தூர் மற்றும் செலுவே கவுடா தயாரித்துள்ள இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மற்றும் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. காந்தாரா சேப்டர் 1 படம் வெளியாகி 2 வாரங்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.717.50 கோடி வரையில் வசூல் எடுத்துள்ளது. இந்த தீபாவளி பண்டிகைக்கு பெரிய ஸ்டார் நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் இல்லாத நிலையில் காந்தாரா இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் காந்தாரா சாப்டர் 1 படம் ரூ.1000 கோடி வசூல் குவித்த கன்னட படம் என்ற சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படம் ரூ.1700 கோடி வரையில் வசூல் குவித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

